வியர்வை நாற்றம் வராமல் இருக்க | How to Stop Sweat From Smelling Bad
நாம் எப்போதும் மற்றவர்கள் முன்னிலையில் தனித்து விளங்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் சிலர் தனித்து தெரிய வேண்டும் என்ற காரணத்தினால் வழக்கம் போல் செய்யும் செயலை வேறு விதமாக செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் இது மட்டும் இல்லாமல் நமது உடலில் இருந்து வரும் வியர்வை நாற்றம் காரணமாகவும் நாம் தனித்து தான் தெரிகிறோம். நம்மில் பாதி பேருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்றால் அது வியர்வை நாற்றம் தான். வியர்வை நாற்றம் யாருக்கும் தெரிய கூடாது என்ற காரணத்தினால் வாசனையான சோப், வாசனை திரவியம் மற்றும் பவுடர் என உபயோகப்படுத்த கொண்டிருக்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் உங்களை 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் மட்டும் தான் வியர்வை துறுநாற்றம் வராமல் இருக்க செய்யும். அதனால் தான் இன்றைய பதிவில் எவ்வளவு நேரம் ஆனாலும் உடம்பில் வியர்வை நாற்றம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Avoid Sweat Smell Naturally:
வியர்வை துறுநாற்றம் வராமல் இருக்க தினமும் ஒரு முறை கண்டிப்பாக சுத்தமாக குளிக்க வேண்டும். அப்படி தினமும் குளிப்பதோடு சில செயல்களையும் சேர்த்து செய்தால் போதும் வியர்வை துறுநாற்றம் பிரச்சனையே இருக்காது.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் சில பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கிறது. இத்தகைய தேங்காய் எண்ணெயில் இருக்கின்றன ஆண்டிமைக்ரோபியல் நமது சருமத்திற்கும் மற்றும் வியர்வை துறுநாற்றத்திற்கும் பயன்படுகிறது.
அதனால் தினமும் குளித்த முடித்த பிறகு தேங்காய் எண்ணெயினை உடலில் நன்றாக தேய்த்தால் போதும் நமது உடலில் பாக்டீரியாக்கள் எதுவும் உருவாகாமல் அதனை அழித்து நம்மை வியர்வை துறுநாற்றம் வராமல் இருக்க செய்கிறது.
இதையும் படியுங்கள்⇒ அக்குள் கருமையை நீக்க உருளைக்கிழங்கு, தேங்காய் எண்ணெய் முதல் இன்னும் சில டிப்ஸ்
வெந்தயம்:
நீங்கள் 1 தேக்கரண்டி வெந்தயம் எடுத்துக்கொண்டு அதனை 250 மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆற வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்த பிறகு ஆற வைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இதேபோல் தினமும் குடித்தால் போதும் வெந்தயத்தில் உள்ள பாக்டீரியாவை எதிர்கொள்ளும் பண்புமும் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புமும் வியர்வை துறுநாற்றத்தை சுரக்கும் நச்சுக்களை அழித்து வியர்வை துறுநாற்றத்தில் இருந்து பாதுகாக்கும்.
தக்காளி:
தக்காளிக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் B, வைட்டமின் C, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியில் இருந்து சாறு பிழிந்து வைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு காட்டன் துணி எடுத்துக்கொண்டு அதனை தக்காளி சாறில் நனைத்து வியர்வை துறுநாற்றம் வரும் பகுதியில் தடவினால் போதும்.
தக்காளியில் இருக்கின்றன பாக்டீரியாவை அழிக்கும் பண்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்பு வியர்வை துறுநாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்து உங்களை இயல்பாக இருக்க செய்யும்.
தினமும் நீங்கள் குளித்து அதனுடன் நிறைய தண்ணீர் குடித்து மேலே சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்தால் போதும் வியர்வை துறுநாற்றம் என்பதே இல்லாமல் போகிவிடும்.
இதையும் படியுங்கள்⇒ முட்டிகளில் இருக்கும் கருமையை நீக்க எலுமிச்சை, தேன் இன்னும் சில டிப்ஸ்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |