நல்ல மீன் எது? பழைய மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி? இந்த விஷயத்தை மட்டும் தெரிந்திக்கோங்க போதும்..!

Advertisement

நல்ல மீன் எது? கெட்ட மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி?

How to Buy Fresh Fish From Market Tamil – அதிக ஊட்டச்சத்து மற்றும் சுவையுள்ள உணவுகளுக்களில் மீனும் இடம் பெற்றுள்ளது. உலகில் பல கோடி மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மீன் உள்ளது. மீன் சாப்பிடுவதினால் கண்களுக்கு மிகவும் நல்லது. இருந்தாலும் இந்த மீன் வாங்குவதில் மக்களுக்கு நிறைய குழப்பம் இருக்கும். அது என்ன குழப்பம் என்றால் நாம் வாங்க கூடிய மீன் பிரஷான மீன் தான அல்லது பழைய மீனா என்று நிறைய குழப்பம் இருக்கும். இந்த குழப்பத்தில் இருந்து விடுபட இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே உங்கள் குழப்பத்தை தீர்க்க உதவு வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால்.. மீன் வாங்குபொழுது எப்படி வாங்க வேண்டும்? எப்படி ஏமாறாமல் மீன் வாங்குவது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நல்ல மீன் வாங்குவது எப்படி? | How to Buy Fresh Fish From Market Tamil

டிப்ஸ்: 1

மீன் வாங்குபொழுது மீனின் கண்களை பாருங்கள், மீனின் கண்கள் வெள்ளைய இருந்தால் அந்த மீன் பிரஷான மீன், அதுவே மீனின் கண்கள் சிவந்து அல்லது மூடி இருந்தால் அது பழைய மீன் ஐஸ் பெட்டில் வைத்து விற்கப்படும் மீன் ஆகும்.

டிப்ஸ்: 2

பிரஷான மீன் என்றால் அந்த மீனை கையில் பிடிக்கும் பொழுது நொதநொதன்னு இருக்காது அதாவது அந்த மீன் கொழகொழப்பாக மீனை தொட்டால் அமுங்கும். அப்படி இருந்தால் அந்த மீன் பழைய மீன் ஆகும். பிரஷான மீன் என்றால் மீனை கையில் தொடும்பொழுது கொழகொழப்பாகவோ அல்லது நொதநொதன்னு இருக்காது.

டிப்ஸ்: 3

பிரஷான மீன் என்றால் அந்த மீனின் நிறம் அப்படியே இருக்கும். அதுவே ஐஸ் பெட்டியில் வைத்து விற்கப்படும் மீன் என்றால் அந்த மீனின் நிறம் மாறிவிடும்.

டிப்ஸ்: 4

பிரஷான மீன் என்றால் கையில் எடுத்து பார்க்கும்பொழுது வளையாது. அதுவே பழைய மீன் என்றால் கையில் எடுத்து பார்க்கும்பொழுது வளையும்.

டிப்ஸ்: 5

மீன்களின் செதில்களை தூக்கி பார்க்கும் பொழுது மீனின் செதில்கள் சிவப்பாக இருக்க வேண்டும். அதுவே பழைய மீனாக இருந்தால் அந்த மீனின் செதில் மங்கலாக தெரியும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement