கரும்பை எப்படி பார்த்து வாங்க வேண்டும்.?

Advertisement

How to Buy Sugarcane in Tamil

பொங்கல் என்றால் நம் நினைவில் முதலில் வருவது கரும்பும் சர்க்கரை பொங்கலும்தான். சர்க்கரை பொங்கலை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் செய்து சாப்பிடலாம். ஆனால், கரும்பு பொங்கலுக்கு மட்டுமே அதிமாக கிடைக்கும். ஆகையால், ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக கரும்பு வாங்குவது வழக்கம். அதிலும், பெரும்பாலான வீடுகளில் கரும்புகளை 1 கட்டு 2 கட்டு என அதிகமாக வாங்கி வைத்துவிடுவார்கள். அதன் பிறகு, இரண்டு மாதங்கள் வரை அதனை சேமித்து வைத்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தித்திப்பு சுவை உடையது கரும்பு.

கரும்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தித்திப்பான கரும்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்பை தரமானதாக பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். ஆனால், இதனை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. கரும்பு விற்கும் இடத்திற்கு சென்று ஏதோவொரு கரும்பு கட்டை வாங்கி வந்துவிடுவார். அதன் பிறகு, வீட்டில் வந்து சாப்பிட்ட பிறகு, கரும்பு தித்திப்பாக இல்லை.. பூச்சியாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆகையால் உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் நல்ல தரமான கரும்பை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இபபதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கரும்பை எப்படி பார்த்து வாங்க வேண்டும்.?

கணுக்கள் இடைவெளி:

கரும்பில் உள்ள கணுக்கள் நன்கு இடைவெளி விட்டு இருக்க வேண்டும். அதாவது, கணுக்கள் 5 இன்ச் அல்லது 4 இன்ச் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு கரும்பிலும் 18 அல்லது 20 கணுக்கள் இருக்குமாறு பார்த்து வாங்க வாங்க வேண்டும். 18 அல்லது 20 கணுக்கள் இருந்தால் தான் அக்கரும்பு நன்கு முழுவதுமாக வளர்ச்சியடைந்த கரும்பு ஆகும். ஆகையால், 18 அல்லது 20 கணுக்கள் உள்ள கரும்பாகவும் கணுக்கள் நல்ல இடைவெளி விட்டு இருக்கும் கரும்பாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

கரும்பை எப்படி பார்த்து வாங்க வேண்டும்

எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்கவேண்டும் தெரியுமா..?

வேர் உள்ள கரும்பு:

கரும்பு வாங்கும்போது நல்ல வேர் இருக்கும் கரும்பாக பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான், கரும்பு நல்ல சத்துடனும் இனிப்பாகவும் இருக்கும். வேர் இல்லாத கரும்புகளை வாங்கினால், அதில் சுவை என்பதே இருக்காது. ஆகையால், வேர் உள்ள கரும்பை வாங்க வேண்டும்.

கருப்பாக உள்ள கரும்பு:

கரும்பு வாங்கும்போது நல்ல கருப்பாக இருக்கும் கரும்புகளை பார்த்து வாங்க வேண்டும். கருப்பாக இருக்கும் கரும்பு தான் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், தண்ணீரையும் கொண்டிருக்கும். மாநிறமாகவோ அல்லது சிகப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும் கரும்புகளை வாங்க கூடாது. ஏனென்றால், அக்கரும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதால் தான் கரும்பு மாநிறமாக இருக்கும். ஆகையால், கருப்பு நிற கரும்பினை வாங்குவது நல்லது.

சதைப்பற்றுள்ள கரும்பு:

கரும்பு நல்ல சதைப்பற்றுள்ளதாகவும் நல்ல தடிமனாகவும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். மேலும், கரும்பின் தோகை பச்சையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

கரும்பை எப்படி சாப்பிட வேண்டும்.?

நம்மில் பெரும்பாலானவர்கள் கரும்பை வெட்டி அப்படியே சாப்பிடுவார்கள். ஆனால், இது மிகவும் தவறான ஒன்று. கரும்பின் மேல் பகுதியை நன்கு கழுவிட்டு அதன் பிறகே சாப்பிட வேண்டும். ஏனென்றால், கரும்பு பல ஊர்களை கடந்து கொண்டுவரப்படுகிறது. மேலும், சாலையோரங்களில் கரும்பு அடுக்கி விற்கப்படுவதால் கரும்பின் மேற்பகுதியில் தூசுகள், அழுக்குகள் போன்றவை படிந்திருக்கும். ஆகையால், கரும்பை நன்கு கழுவி அதன் பிறகே சாப்பிட வேண்டும்.

நீங்க வாங்குறது நல்ல முட்டையான்னு எப்படி கண்டுபிடிக்கிறது.?

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement