How Do We Buy Vegetables By Weight or By Size in Tamil
அனைவரின் வீட்டிலும் எப்போதும் காய்கறி வாங்குவது வழக்கம் அல்லவா..? அப்படி நாம் காய்கறி வாங்க சென்றால் அங்கு காய்கறிகளை கொடுப்பதை மட்டும் வாங்கி வருவோம்..! ஆம் வீட்டில் உள்ள அம்மா அல்லது அப்பா வாங்குவது மட்டும் காய்கறிகள் நன்றாக இருக்கும். அப்படி இருக்கும் காய்கறிகளை சரியாக பார்த்து வாங்குவது எப்படி என்பதை பற்றிய பதிவு தான் இந்த பதிவு..!
ஒவ்வொரு காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவது, அது எப்படி இருந்தால் காய்கறிகளை வாங்கக்கூடாது என்பதை பற்றி தான் இந்த பதிவு..! சரி வாங்க அதை பற்ற தெளிவாக தெரிந்துகொள்வோம்..!
How Do We Buy Vegetables By Weight or By Size in Tamil:
பீர்க்கக்காய்:
பீர்க்கங்காய் நிறம் பார்த்து வாங்கவேண்டும். அதேபோல் முக்கியமாக பச்சை நிறம் அதிகம் உள்ளது வாங்க கூடாது. அடி பகுதி குண்டாக இல்லாமல் இருக்கவேண்டும்.
காலிஃப்ளவர்:
காலிஃப்ளவர் பூக்கள் பார்த்து வாங்க வேண்டும். பூக்களுக்கு இடம் இல்லாமல் இருந்தால் அது நல்ல காலிஃப்ளவர் அதை வாங்கிக்கொள்ளலாம்.
பீட்ரூட்:
பீட்ரூட் கீறி பார்த்துவேண்டும். கீறும் போது சிவப்பு நிறத்தில் இருக்கவேண்டும். கீறும் போது சிவப்பு நிறத்தில் இருந்தால் அது ஊட்டி பீட்ரூட் ஆகும். அதுவே சாதாரண நிறமாக இருந்தால் அது ஊர்களில் கிடைக்கும் காய் ஆகும்.
வெங்காயம்:
வெங்காயத்தை அழுத்தி பார்த்து வாங்கவேண்டும். அழுத்தும் போது அமுங்கினால் அது சரியான வெங்காயம் அல்ல. அதுவே அமுங்காமல் இருந்தால் அது நல்ல வெங்காயம் ஆகும்.
உருளைக்கிழங்கு:
உருளைகிழங்கை சுரண்டி பார்த்து வாங்க வேண்டும். உருளைக்கிழங்கிற்கு மேல் தழும்பு, பச்சைநிறம், ஓட்டை இருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்கவும்.
தக்காளி:
தக்காளி கொஞ்சம் காயாக உள்ளதாக வாங்கவேண்டும். அப்படி வாங்கும் போது தான் அது நீண்ட நாட்கள் வரும்.
முருங்கைக்காய்:
முருங்ககாயை முறுக்கி பார்த்து வாங்கவேண்டும். முருங்கைக்காய்க்கு மேல் முக்கோணம் போல் இருந்தாலோ அல்லது அது முறுக்கிய உடன் உடைந்தாலோ அது முத்தின முருங்கக்காய் ஆகும்.
கத்திரிக்காய்:
கத்திரிக்காயை காம்பு பார்த்து வாங்கவேண்டும். காம்பு சின்னதாக இருந்தால் காய் கசக்கும். காயில் சின்ன சின்ன ஓட்டை இருந்தால் அது பூச்சி காய்கறியாகும்.
இதுபோல தேங்காய் இருந்தால் வாங்கவே வாங்காதீர்கள்
வாழைக்காய்:
வாழைக்காயை காம்பு பார்த்து வாங்கவேண்டும். காம்பு உரித்தால் அது வெள்ளையாக இருந்தால் அது நல்ல காய் ஆகும்.
அவரைக்காய்:
அவரைக்காயை மொச்சையை பார்த்து வாங்கவேண்டும். அது சின்னதாக இருந்து பெருசாக இல்லாமல் இருந்தால் அதை வாங்கிக்கொள்ளலாம்.
முள்ளங்கி:
முள்ளங்கி பெரியதாகவும் இருக்க கூடாது சின்னதாகவும் இருக்கக்கூடாது. சாதாரணமான உயரத்தில் இருக்கவேண்டும். அதேபோல் அதில் உள்ள இலைகள் பச்சையாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதனை வாங்கி கொள்ளலாம்.
சவு சவு:
சவு சவு விரிசலை பார்த்து வாங்கவேண்டும். காய்களில் நிறைய விரிசல் இருந்தால் சவு சவு வாங்க கூடாது. விரிசல் குறைவாக இருந்தால் பெரிய காயாக பார்த்து வாங்கவேண்டும்.
எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |