How to Clean a Sofa At Home in Tamil | How to Clean Dirty Fabric Sofa at Home
அனைவருமே வீட்டை பார்த்து பார்த்து சுத்தம் செய்வோம். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டும் சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்து விடுவோம். காரணம் நமக்கு சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அது கிச்சன், பாத்ரூம், பூஜை அறை போன்றவை தான் முதலில் நினைவிற்கு வரும். எனவே நாம் வீட்டில் உள்ள மற்ற பொருட்களை சுத்தம் செய்வதில்லை. அப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட சிலருக்கு எப்படி சுத்தம் செய்வது என்பது தெரியாது.
அந்த வகையில் வீட்டில் உள்ள சோபாவை சுத்தமாக வைக்க பயனுள்ள சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து அழுக்கு படிந்த சோபாவை எப்படி சுத்தம் செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
How To Clean a Fabric Sofa Naturally in Tamil:
சோபாவை சுத்தமாக வைக்க செய்ய வேண்டிய அடிப்படை முறைகள்:
சோபாவிற்கு கட்டாயம் மேலுறை போடுவது நல்லது. மேலும் மாதத்திற்கு ஒருமுறை வீட்டில் உள்ள சோபா, தலையணைகள் மற்றும் மெத்தைகள் போன்ற பொருட்களை வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சோபாவில் உள்ள நுண்கிருமிகள் அழிந்துவிடும்.
டிப்ஸ்- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சோபாவின் அளவிற்கு ஏற்றவாறு வினிகர் மற்றும் துணி துவைக்கும் பவுடர் அல்லது துணி துவைக்கும் லிக்யூடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, இத்தண்ணீரில் ஒரு சுத்தமான துணியை நனைத்து சோபாவை நன்றாக அழுத்தி துடைக்கவும். சோபாவில் உள்ள அழுக்கு நீங்கும் வரை நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.
பிறகு, சுத்தமான தண்ணீர் கொண்டு சோபாவை துடைத்து கொள்ளுங்கள். அதன் பின் சோபாவை 1 நாள் முழுவதும் வெயிலில் நன்றாக உலர்த்தி விடுங்கள்.
அழுக்காக இருக்கும் சுவிட்ச் போர்டை புதியது போல் ஜொலிக்க வைக்க இந்த ஒரு பொருள் போதும்..!
டிப்ஸ் -2
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இதில் பாத்திரம் கழுவும் சோப் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை கொண்டு சோபாவை துடைத்து சுத்தம் செய்யுங்கள்.
பிறகு, சுத்தமான தண்ணீர் கொண்டு சோபாவை துடைத்து கொள்ளுங்கள். அதன் பின் சோபாவை 1 நாள் முழுவதும் வெயிலில் நன்றாக உலர்த்தி விடுங்கள்.
டிப்ஸ் -3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு பேக்கிங் சோடா சேர்த்து கெட்டியாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இப்பேஸ்டினை கொண்டு சோபாவை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு, சுத்தமான தண்ணீர் கொண்டு சோபாவை துடைத்து கொள்ளுங்கள். அதன் பின் சோபாவை 1 நாள் முழுவதும் வெயிலில் நன்றாக உலர்த்தி விடுங்கள்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |