உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Clean Bathroom Floor Tiles in Tamil 

பொதுவாக நாம் வாழும் வீட்டினை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. அதிலும் முக்கியமாக நமது வீட்டில் உள்ள பாத்ரூம்களை சுத்தமாக பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதனை சுத்தமாக பராமரிப்பது என்பது நாம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதிலும் பாத்ரூமில் உள்ள தரை மற்றும் பக்கெட்களில் படிந்து உள்ள உப்பு கறைகளை போக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதற்காக தான் இன்றைய பதிவில் பாத்ரூமில் உள்ள தரை மற்றும் பக்கெட்களில் படிந்து உள்ள உப்பு கறைகளை போக்குவதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Clean Bathroom Floor Tiles Home Remedies in Tamil:

டிப்ஸ் – 1

 how to remove stains from tiles home remedies in tamil

முதலாவதாக நாம் பார்க்க இருக்கும் டிப்ஸ் பாத்ரூமின் தரைகளில் உள்ள உப்புக்கறைகளை நீக்குவதற்கானது தான். இந்த டிப்ஸிற்கான தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பாத்திரம் கழுவும் பொடி – 4 டேபிள் ஸ்பூன் 
  2. வினிகர் – 1/2 கப்  

இதையும் படித்துப்பாருங்கள்=> உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய இப்படி பண்ணுங்க

ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் பாத்திரம் கழுவும் பொடி மற்றும் 1/2 கப் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் பாத்ரூமின் தரைகளில் எங்கெல்லாம் உப்பு கறைகள் உள்ளதோ அங்கெல்லாம் தெளித்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு தொடப்பத்தை பயன்படுத்தி நன்கு தேய்த்து ஒரு 1/2 மணிநேரம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள். இந்த டிப்ஸினை ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் பாத்ரூமின் தரைகளில் உள்ள அனைத்து உப்பு கறைகளும் நீங்கிவிடும்.

டிப்ஸ் – 2

How to clean bathroom buckets and mugs in tamil

இந்த டிப்ஸ் உங்களின் பாத்ரூமில் உள்ள பக்கெட்களில் படிந்துள்ள உப்பு கறைகளை நீக்குவதற்கானது தான். இந்த டிப்ஸிற்கான தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தயிர் – 6 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன் 

இதையும் படியுங்கள் ⇒  வீட்டின் Hall முதல் Bathroom தரை வரை பளிச்சென்று இருக்க இதை மட்டும் பண்ணுங்க

ஒரு பாத்திரத்தில் 6 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் பாத்ரூமில் உள்ள பக்கெட்களில் நன்கு தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து கழுவிக்கொள்ளுங்கள்.

இந்த டிப்ஸினை ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் பாத்ரூமில் உள்ள பக்கெட்டில் உள்ள அனைத்து உப்பு கறைகளும் நீங்கிவிடும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement