Bathroom Cleaning Tips in Tamil
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கஷ்டமான வேலை என்றால் அது பாத்ரூம் சுத்தம் செய்வது தான். இந்த பாத்ரூமை நாம் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் கறை படிந்து கொண்டு தான் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் துர்நாற்றமும் வீசிக்கொண்டே தான் இருக்கிறது. இனிமேல் நீங்கள் பாத்ரூம் சுத்தம் செய்வதற்கு கஷ்டப்படாமல் இருப்பதற்கு இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். ஆகையால் இந்த டிப்ஸினை தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டிலும் நீங்கள் மிகவும் ஈசியாக பாத்ரூமை சுத்தம் செய்யலாம். சரி வாங்க அப்படி என்ன டிப்ஸ் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பாத்ரூம் சுத்தம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- கல் உப்பு- 1 ஸ்பூன்
- கம்போர்ட்- 1 ஸ்பூன்
- ஷாம்பு- 1 ஸ்பூன்
- Dettol- 2 ஸ்பூன்
How to Clean Bathroom:
ஸ்டேப்- 1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த கிண்ணத்தில் 2 ஸ்பூன் Dettol மற்றும் 2 ஸ்பூன் கம்போர்ட் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
சிறிது நேரம் கழித்த பிறகு கிண்ணத்தில் இருக்கும் பொருட்களுடன் 1 ஸ்பூன் ஷாம்பு மற்றும் 1 ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்றாக கல் உப்பு கரையும் வரை 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பாத்ரூம் சுத்தம் செய்ய ஜெல் ரெடி.
ஸ்டேப்- 3
5 நிமிடம் கழித்த நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை 1/2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் கலந்து விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டின் பாத்ரூம் மற்றும் உப்பு கறை படிந்துள்ள இடத்தில் தெளித்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
1/2 மணி நேரம் கழித்த பிறகு உங்களுடைய பாத்ரூமை வழக்கம் போல சுத்தம் செய்து விட்டு பாருங்கள். நமது வீட்டு பாத்ரூமா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அந்த அளவிற்கு உப்பு கறை அனைத்தும் நீங்கள் புதியது போல பளபளக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |