30 வருட டைல்ஸ் கறையை 3 ரூபாயில் கிளீன் செய்யலாம்..!

Hair Fall Control Hair Pack Homemade in Tamil

Bathroom Tiles Cleaning Tips

உங்கள் வீட்டில் எப்போதும் டைல்ஸ் இருக்கும். முன்பு அனைவரின் வீட்டிலும் சிமெண்ட் தரை தான் இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரின் வீட்டிலும் டைல்ஸ் தான் உள்ளது. இதனை பார்க்கும் போது சுத்தமாக இருக்கும்.  ஆனால் அதில் நடந்து பார்த்தால் கால்கள் பிசு பிசுப்பாக இருக்கும். அதேபோல் பாத்ரூம் பக்கம் போனால் கறையாக இருக்கும். அதனை சுத்தம் செய்ய நிறைய ஐடியா இருக்கும். அதனை வைத்து நாம் சுத்தம் செய்தாலும் அது அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்காது. ஆகவே மிகவும் எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சுத்தம் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Bathroom Tiles Cleaning Tips

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள தான் ஆர்வம் அதிகம் இருக்கும்.  ஆனால் உண்மையில் சொல்லப்போனால் என்ன செய்தாலும், வீட்டை மறுமுறை பார்க்கும் போது அதேபோல் தான் இருக்கும். இதற்கு என்ன தான் செய்யவேண்டும் என்று அனைவருக்கும் கேள்வி இருக்கும். சரி வாங்க மிகவும் எளிமையாக வீட்டின் டைல்ஸ், பாத்ரூம் டைல்ஸ் அனைத்தையும் சுத்தம் செய்யும் அருமையான வழிகளை பார்க்கலாம்.

டிப்ஸ்: முதலில் உங்கள் கையில் ஒரு கவர் போட்டு சுற்றிக் கொள்ளவும். அதேபோல் அடுத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். அதில் 2 கார்த்திகா சீயக்காய் பிரித்து அதில் போடவும். அதன் பின்பு சீயக்காய் மட்டும் பயன்படுத்தினால் ஷாம்பு கோச்சிக்கும்  அல்லவா..! அதனால் 1 ரூபாய்க்கு ஷாம்பு வாங்கி அதையும் பிரித்து அந்த கப்பில் சேர்த்துக் கொள்ளவும்.

உங்க வீடு எப்பொழுதும் நறுமணமாக இருக்க வேண்டுமா  அப்போ இதை ட்ரை பண்ணுங்க 

அடுத்து ஒரு பொருள் சேர்க்க போகிறோம். இது அனைவரின் வீட்டிலும் இருக்கும். அது என்ன தெரியுமா அது தான் புளித்த தயிர். அதனை நாம் சாப்பிடாமல் கீழ் கொட்டுவோம். இனி கொட்டாமல் இது மாதிரி சேர்த்துக் கொள்ளவும். அதனை 1/2 டம்ளர் அளவு தயிர் சேர்த்து ஷாம்பு, சீயக்காய் அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.

குறிப்பு: உங்களிடம் புளித்த தயிர் இல்லையென்றால் வீட்டில் இட்டலி மாவு இருக்கும் அது கொஞ்சம் புளித்து இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் கிளீனிங் லிக்விட் ரெடி.

Bathroom Tiles Cleaning Tips

அடுத்து கையில் கவர் போட்டு ஒரு ஸ்க்ரப்பர் வைத்துக்கொண்டு ஸ்க்ரப் அதில் நனைத்து தேய்த்து கழுவவும். அவ்வளவு தான் இது நல்ல மாற்றம் ஏற்படும். இதனை செய்து பாருங்கள் உங்கள் வீடு பளிச்சென்று இருக்கும். இதனை வீட்டில் உள்ள அழுக்கு டைல்ஸ் கூட சரி செய்யும்.

வீட்டு டைல்ஸ் தரை எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil