உங்கள் வீட்டு பாத்ரூம் சுவற்றில் உப்பு கறை படிந்துள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

பாத்ரூம் டைல்ஸ் கிளீன் செய்வது எப்படி? | How to Clean Bathroom Floor Tiles in Tamil

பொதுவாக பாத்ரூமில் தண்ணீர் அதிகளவு புழங்குவோம். அப்படி தண்ணீர் அதிகளவு புழங்கும் போது பாத்ரூமில் உள்ள அவற்றில் உப்பு கறை படிந்துகொள்ளும். அதனை அடிக்கடி சுத்தம் செய்துகொண்டு இருந்தால் அவற்றை சுத்தம் செய்வது என்பது மிகவும் எளிதாக இருக்கும். அதுவே சுத்தம் செய்யாமல் இருந்தோம் என்றால் அவற்றை கிளீன் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கடினமான வேலையை மிக சுயமாக செய்வதற்கான டிப்ஸை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். அதாவது பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை எப்படி எளிமையாக சுத்தம் செய்யலாம் என்று, இந்த டிப்ஸில் நாம் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்த போவதில்லை. சரி வாங்க வேறு என்ன பொருளை பயன்படுத்தி பாத்ரூமில் உள்ள கறையை அகற்றப்போகிறோம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று
  2. தண்ணீர் – தேவையான அளவு
  3. தூள் உப்பு – ஒரு கையளவு
  4. வாஷிங் சோடா – ஒரு கையளவு
  5. ஷாம்பு – ஒரு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்

பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி? | How to Clean Bathroom Wall Tiles in Tamil

ஒரு பவுலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தூள் உப்பு ஒரு கையளவு, வாஷிங் சோடா ஒரு கையளவு மற்றும் ஒரு ஸ்பூன் ஷாம்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்பொழுது பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்வதற்கு ஸ்ப்ரே தயாராகிவிட்டது. இதனை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தயார் செய்த இந்த கிளீனரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பாத்ரூம் சுவற்றில் நன்றாக  ஸ்ப்ரே செய்யுங்கள்.

பின்பு 10 நிமிடம் வரை காத்திருக்கவும், 10 நிமிடம் கழித்து அவற்றை ஸ்கிரப்பரை கொண்டு நன்றாக தேய்த்து விடவும். கறை அதிகம் உள்ள இடத்தில் ஷாம்புவை பயன்படுத்தி நன்றாக தேய்த்தால் போதும் உப்பு கறை அனைத்தும் அகன்றுவிடும்.

கண்டிப்பாக இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்துபாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil