How to Clean Brass Vessels in Tamil | பித்தளை பாத்திரம் சுத்தம் செய்வது எப்படி.?
நாம் அனைவரின் வீட்டிலேயும் பித்தளை பாத்திரங்கள் இருக்கும். அதனை சுத்தம் செய்வதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட்டு கைகளால் பலமாக தேய்த்து தான் சுத்தம் செய்திருப்போம். ஆனால் இனிமேல் அப்படி கஷ்டப்பட்டு கைகளால் பலமாக தேய்த்து சுத்தம் செய்ய தேவையில்லை. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களுக்கு பயனுள்ள பல குறிப்புகளை பற்றி பார்த்துக்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பித்தளை பாத்திரங்களை எவ்வாறு எளிமையாக சுத்தம் செய்வது என்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
How to Clean Brass Items at Home in Tamil:
முதலில் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- புளி – 1 எலுமிச்சை பழ அளவு
- உப்பு – 1 கைப்பிடி அளவு
- எலுமிச்சை பழம் – 1
முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு 1 எலுமிச்சை பழ அளவு புளி, 1 கைப்பிடி அளவு உப்பு மற்றும் 1 எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து 15 – 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களும் பளபளக்க இந்த 1 பவுடர் போதும்
பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி 1 மணி நேரத்துக்கு அப்படியே விடுங்கள். பின்னர் அதனை எடுத்து லேசாக தேய்த்து தூய்மையான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களின் பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறியிருப்பதை நீங்களே காணலாம்.
How to Clean Bronze Items in Tamil:
முதலில் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- புளி – 1 எலுமிச்சை பழ அளவு
- உப்பு – 1 கைப்பிடி அளவு
- சோடா உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வெள்ளி நகைகளை புதுசாக மாற்ற சிறந்த டிப்ஸ் இதோ
பிறகு 1 எலுமிச்சை பழ அளவு புளி, 1 கைப்பிடி அளவு உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே அதில் நாம் சுத்தம் செய்ய வேண்டிய பித்தளை பாத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து 10 – 15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடுங்கள்.
பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி 1/2 மணிநேரத்துக்கு அப்படியே விடுங்கள். பின்னர் அதனை எடுத்து லேசாக தேய்த்து தூய்மையான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களின் பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறியிருப்பதை நீங்களே காணலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |