How To Clean Broken Glass From Floor in Tamil
சில நேரங்களில் நம்மை அறியாமலோ அல்லது கை தவறியோ சில பொருட்கள் கீழே விழுந்து விடும். அத்தகைய பொருட்கள் சாதாரணமான பொருட்களாக இருந்தால் அதை கையால் எடுத்து விடலாம். ஆனால் அதுவே கண்ணாடி பொருட்களாக இருந்தால் கையால் எடுக்கும் போது கையை கிழித்து விடும். அதுமட்டுமில்லாமல் சுத்தமாகவும் கண்ணாடி பொருட்களை தரையில் இருந்து எடுக்க முடியாது. எனவே கை வைக்காமலே தரையில் விழுந்த கண்ணாடி பொருட்களை ஈசியாக சுத்தம் செய்வதற்கான சில முறைகளை தான் இப்பதிவில் கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து உடைந்த கண்ணாடி பொருட்களை பாதுகாப்பாக சுத்தம் செய்யுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Remove Broken Glass Pieces From Floor in Tamil:
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு பாதியாக வெட்டி கொள்ளுங்கள். இதனை உடைந்த கண்ணாடி துகள்களின் மேல் வைத்து எடுத்தால் கண்ணாடி துகள் எல்லாம் உருளைக்கிழங்கின் ஈரபதத்தில் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். எனவே, பாதுகாப்பான முறையில் கண்ணாடி துகள்களை சுத்தம் செய்து விடலாம்.
ஈரமான காகிதம்:
காகிதத்தில் சிறிதளவு தண்ணீர் தெளித்து காகிதம் ஈரப்பதம் ஆனதும் அதனை உடைந்த கண்ணாடி துகள்களின் மேல் வைத்து எடுத்தால் உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் காகிதத்தில் ஒட்டிக்கொண்டு வந்துவிடும். இதன் மூலம், நீங்கள் தரையில் 1 கண்ணாடி துகள் கூட மிச்சம் இல்லாமல் சுத்தம் செய்து விடலாம். ஆனால் கவனமாக கையில் கிழிக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
1 ஸ்பூன் உப்பு மட்டும் போதும் 1 நிமிடத்தில் பூஜை பாத்திரங்கள் தங்கம் போல் ஜொலிக்கும்..!
கோதுமை மாவு:
கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது இதனை தரையில் உடைந்த கண்ணாடி துகள்களின் மீது வைத்து சுத்தம் செய்வதன் மூலம் 1 கண்ணாடி துகள் கூட மிச்சம் இல்லாமல் எல்லா துகள்களும் சப்பாத்தி மாவில் ஒட்டிக்கொள்ளும். எனவே உங்கள் கைகளுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் கண்ணாடி துகள்களை சுத்தம் செய்து விடலாம்.
பிரெட் துண்டுகள்:
பிரட் துண்டுகளை உடைந்த கண்ணாடி துகள்களின் மீது வைத்து எடுப்பதன் மூலம் உடைந்த கண்ணாடி துகள்கள் அனைத்தையும் எளிமையாக சுத்தம் செய்து விடலாம்.
வாழைப்பழத் தோல்:
கையை பயன்படுத்தாமல் வாழைப்பழ தோலினை கொண்டு உடைந்த கண்ணாடி துகள்களை சுத்தம் செய்யலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |