How to Clean Burnt Vessel in Tamil
பொதுவாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் நம்மால் மிகவும் எளிமையாக முடித்து விட முடியும். ஆனால் நாம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு வேலை என்றால் அது பாத்திரம் கழுவுதல் தான். அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு பாத்திரம் சமைக்கும் பொழுது கருகி அடிபிடித்து விட்டது என்றால் அன்று நமக்கு அந்த பாத்திரத்தில் இருந்து அந்த அடிபிடித்த கறையை போக்குவதற்குள் நமது பெரும்பாடாகிவிடும். அதனை தேய் தேய்ன்னு தேய்த்து நமது கைகள் தான் மிகவும் வலிக்கும். ஆனால் இனிமேல் அடி பிடித்த பாத்திரத்தை கை வைக்காமலே சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இந்த பதிவை முழுதாக படித்தால் அதற்கான பதில் கிடைத்து விடும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் போகலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Burnt Stains from Vessels in Tamil:
கருகி அடிபிடித்துள்ள பாத்திரத்தில் உள்ள அடி பிடித்த கறைகளை கைகளை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- சலவை தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
வீட்டை எப்போதும் வாசனையாக வைத்துக்கொள்ள இதை செய்தல் போதும்
அடி பிடித்த பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் அடி பிடித்த பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனை அடுப்பில் வையுங்கள்.
பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்:
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடுங்கள்.
சலவை தூளை சேர்த்து கொள்ளுங்கள்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சலவை தூளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
எலுமிச்சை பழச்சாற்றினை கலக்கவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றினையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றி விட்டு லேசாக தேய்த்து கழுவி கொள்ளுங்கள்.
இப்போது அதில் உள்ள அனைத்து அடி பிடித்த கறைகளும் நீங்கி விடும்.
கருகிப் போன பால் பாத்திரத்தை சுத்தம் செய்ய தக்காளியை இப்படி பயன்படுத்துங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |