Exhaust Fan Cleaning Tips in Tamil | How to Clean Greasy Exhaust Fan
இப்போது பெரும்பாலும் அனைத்து வீட்டு சமையலறைகளிலும் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமைக்கும்போது ஏற்படும் புகையையும் வெப்பத்தையும் வெளியேற்றுவதற்கு இது உதவுகிறது. எனவே சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படி எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தும்போது அதில் நாளடைவில் எண்ணெய் பிசுபிசுப்பும், தூசி போன்றவை ஒட்டிக்கொள்ளும். இதனால் எக்ஸாஸ்ட் ஃபேன் விரைவில் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளது. எனவே இதனை எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்காக சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வீட்டில் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துபவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
How To Clean Exhaust Fan in Kitchen in Tamil | How to Clean Exhaust Fan at Home:
டிப்ஸ் -1
முதலில் எக்ஸாஸ்ட் ஃபேனிற்கு வரும் மின்சாரத்தை ஆஃப் செய்து கொள்ளுங்கள். இப்போது எக்ஸாஸ்ட் ஃபேனில் வடிகட்டிகள் இருந்தால் அதை நீக்கிவிட்டு கொதிக்கும் நீரில் ஊறவைக்கவேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/4 கப் அம்மோனியா கலந்து வடிகட்டிகளை 1 மணிநேரம் அதில் ஊறவைத்து கொள்ளுங்கள். இப்போது இதனை நன்கு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். மேலும் எக்ஸாஸ்ட் ஃபேனின் பிளேடுகளை சுத்தம் செய்வதற்கு சோடியம் பாஸ்பேட்டை ஒரு கிளீனராக பயன்படுத்தலாம்.
டிப்ஸ் -2
எக்ஸாஸ்ட் ஃபேனின் பிளேடுகளை சோப்பு மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பிளேடுகளை சுத்தம் செய்யும்போது ரப்பர் கையுறைகளை அணிவது அவசியம்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 1/4 கப் அமோனியா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையில் எக்ஸாஸ்ட் ஃபேனின் பிளேடுகளை ஊறவைத்து காட்டன் துணியை பயன்படுத்தி சுத்தம் செய்து விடுங்கள்.
வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..?
டிப்ஸ் -3
காஸ்டிக் சோடாக்களை பயன்படுத்தி எக்ஸாஸ்ட் ஃபேனில் படித்திருக்கும் எண்ணெய் பிசுக்கை நீக்கலாம். பிறகு, சூடான நீரை கொண்டு அதில் எஞ்சி இருக்கும் அழுக்குகளை நீக்கலாம்.
டிப்ஸ் -4
வினிகர் அல்லது சோப்பு ஆயில் மற்றும் க்ளீனர் சொல்யூஷன்கள், பேஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி எக்ஸாஸ்ட் ஃபேனை நன்கு தேய்த்து சுத்தம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எக்ஸாஸ்ட் ஃபேனில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் கிரீஸ் போன்றவற்றை நீக்கலாம்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |