How to Clean Fridge
ஒரு வீடு என்றால் அதில் நம்முடைய தேவைக்காக பயன்படுத்தப்படும் சில பொருட்கள் கட்டாயமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், கேஸ் மற்றும் Fan என இவை அனைத்துமே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த பொருட்கள் எல்லாம் நம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று ஆகும். இத்தகைய பொருட்களில் முக்கியமாக பிரிட்ஜ் என்று எடுத்துக்கொண்டால் பழங்கள் முதல் காய்கறிகள் மற்றும் உணவுகள் என அனைத்தும் கெட்டு போகாமல் இருப்பதற்கு உதவுகிறது. ஆனால் பல பயன்பாட்டிற்காக நாம் பிரிட்ஜை பயன்படுத்தி கொண்டாலும் கூட அதனை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே இன்று மிகவும் எளிய முறையில் பிரிட்ஜை எப்படி சுத்தம் செய்வது என்றும், எப்போதும் புதிய போல இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பிரிட்ஜ் நாற்றம்:
பிரிட்ஜில் நாற்றம் வராமல் இருப்பதற்கு உணவுகளை மூடி வைக்க வேண்டும். உணவு மட்டுமில்லாமல் சாப்பிடும் வேறு பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதனை மூடி வைக்க வேண்டும். அதிலுருந்து வரும் நகரம் குளிர்சாதன பெட்டி முழுவதும் பரவிவிடும்.
பிரிட்ஜின் உள்ளே சுத்தம் செய்தல்:
முதலில் பிரிட்ஜில் பெட்டியில் இருக்கும் உணவுகள் மற்றும் பொருட்களை வெளியே எடுக்கவும். அதன் பிறகு ஒரு கப்பில் தண்ணீர் மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து அந்த தண்ணீரீல் ஒரு துணியை நனைத்து குளிர்சாதன பெட்டியின் உள்ளே துடைக்கவும்.
அதன் பிறகு சுத்தமான தண்ணீரை வைத்து துடைத்து பின்பு காட்டன் துணியை வைத்து துடைத்து கொள்ளவும்.
Induction Stove-யை இது போல் பராமரித்தால் ஆயுள் வரைக்கும் ரிப்பேர் ஆகாது.. |
பிரிட்ஜின் வெளி பக்கம் சுத்தம் செய்தல்:
இப்போது குளிர்சாதன பெட்டியின் வெளிப்புறத்தை முதலில் காட்டன் துணியால் துடைத்து விடவும். அதன் பிறகு ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி அதில் துணியால் நனைத்து பிரிட்ஜை துடைக்கவும், மறுபடியும் காய்ந்த துணியை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.
பிரிட்ஜ் ப்ரீசர் பராமரிப்பு:
கடைசியாக பிரிட்ஜில் இருக்கும் ப்ரீசர் அடிப்பகுதி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகள் இருந்தால் அதனை நீக்க வேண்டும். அடிப்பகுதியினை வினிகரை பயன்படுத்தி சுத்தமாக துடைக்கலாம். பின்பு காய்ந்த துணையினை கொண்டு ஒரு முறை துடைக்க வேண்டும்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள முறையினை பயன்படுத்தி நீங்கள் வாரம் ஒருமுறை பிரிட்ஜை சுத்தம் செய்தால் போதும் பிரிட்ஜ் எப்போதும் புதுசு போல அப்படியே இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |