வெறும் 10 நிமிடத்தில் கேஸ் பர்னர் பளிச்சென்று மாற இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Clean Gas Burner in Tamil

இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கின்றார்கள். அதிலும் ஒரு சிலர் தங்களது துறையில் பல வகையான சாதனைகளையும் படைத்து வருகின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்களுக்கும் வீடு வேலை செய்வது என்பது மிக மிக கஷ்டமாக உணர்வார்கள். ஏனென்றால் பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை பார்த்தால் அவர்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன்பு வரை நமது வீடுகளில் பல வேலைகளை செய்வார்கள்.

அதிலும் ஒரு சில வீட்டு வேலைகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது வீட்டினை சுத்தம் செய்வது சமையல் அறையினை சுத்தம் செய்வது போன்றவை மிக மிக கடினமான வேலை ஆகும். அதிலும் சமையல் அறையில் உள்ள கேஸ் ஸ்டாவை சுத்தம் செய்வதற்குள் நமது பாடு பெரும்பாடாக போய்விடும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள கேஸ் ஸ்டவ்  பர்னரை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Simple Tips for Gas Burner Cleaning in Tamil:

Simple Tips for Gas Burner Cleaning in Tamil

நமது வீட்டில் உள்ள மிகவும் கஷ்டமான ஒரு வேலை என்றால் அது நமது கிட்சனை சுத்தம் செய்வது. அதிலும் குறிப்பாக நமது வீட்டில் உள்ள கேஸ் ஸ்டாவின் பர்னரை சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவு கஷ்டமான ஒரு செயலாக இருக்கும்.

அதனால் தான் மிகவும் எளிமையான முறையில் நமது கேஸ் ஸ்டாவின் பர்னரை சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. எலுமிச்சை பழச்சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
  3. ஹார்பிக் லீகுய்ட் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. சூடு தண்ணீர் – தேவையான அளவு

1 கப் தயிர் போதும் 10 நிமிடத்தில் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற கேஸ் பர்னரை வைத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஹார்பிக் லீகுய்ட் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு சூடு தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள். பிறகு அந்த கேஸ் பர்னரை எடுத்து லேசாக தேய்த்தாலே அதில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

பாத்ரூம் பளபளப்பாக மாற உப்புடன் இதை கலந்து சுத்தம் செய்யுங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement