10 வருட கேஸ் அடுப்பையும் இப்படி சுத்தம் செய்தால் பளிச்சென்று ஆகிவிடும்

how to clean gas stove at home in tamil

கேஸ் அடுப்பு சுத்தம் செய்வது எப்படி.?

நம் முன்னோர்கள் காலத்தில் அடுப்பில் சமைத்தார்கள். அந்த காலத்தில் யாராவது ஒன்று அல்லது இரண்டு பேர் வீட்டில் மட்டும் தான் கேஸ் அடுப்பு பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கேஸ் அடுப்பு பயன்படுத்தாத வீடுகளே இல்லை. இந்த கேஸ் அடுப்பு வாங்கிய புதிதில் பளிச்சென்று இருக்கும். நாளடைவில் கேஸ் அடுப்பு பழையதாக மாறிவிடும். அதனால் இந்த பதிவில் கேஸ் அடுப்பை புதியதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கேஸ் அடுப்பை கிளின் செய்வது எப்படி.?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தினமும் செய்ய வேண்டியவை:

how to clean gas stove at home in tamil

தினமும் கேஸ் அடுப்பில் சமைத்து முடித்தவுடன் அடுப்பின் சூடு குறைந்த பிறகு ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து துடைக்கவும். இப்படி செய்வதனால் கறைகளை உடனே நீக்குவதால் கேஸ் அடுப்பு கிளீனாக இருக்கும்.

இரவு செய்ய வேண்டியவை:

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கேஸ் அடுப்பை ஒரு காட்டன் துணியால் துடைத்து விடவும். பிறகு பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்கிரப்  பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை வைத்து துடைக்கவும்.

அழுக்காக இருக்கும் மிக்சியை புதிதாக மாற்ற இதை Try பண்ணுங்க..! அப்பறம் பாருங்க எப்படி இருக்கும் என்று..!

வாரத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியவை:

வாரத்தில் ஒரு நாள் கேஸ் அடுப்பில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியாக எடுத்து கழுவ வேண்டும்.

கேஸ் பர்னரை எடுத்து பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்.

அடுத்து கேஸ் ஸ்டான்ட் எடுத்து கம்பி நாரை பயன்படுத்தி தேய்த்து கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும்.

how to clean gas stove at home in tamil

பிறகு கேஸ் அடுப்பில் துணி துவைக்க பயன்படுத்தும் துணி பவுடரை தூவி விட்டு ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து ஒரு 10 நிமிடம் அப்படியே விடவும். 10 நிமிடம் கழித்து ஸ்கிரப் பயன்படுத்தி தேய்த்து விட்டு தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். பிறகு கேஸின் அடிப்பகுதியையும் தேய்த்து விட்டு தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்.

பிறகு ஒரு காட்டன் துணியால் துடைத்து விடவும். கேஸ் பர்னர் காய்ந்த பிறகு ஒரு ஊசியால் கேஸ் பர்னரில் இருக்கும் ஓட்டைகளில் குத்தி விடவும். இப்படி செய்வதினால் கேஸ் பர்னரில் இருக்கும் தண்ணீர் மற்றும் தூசிகள் இருந்தால் வந்து விடும்.

கேஸ் பர்னர் கருத்து போயிருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil