Kitchan Tips in Tamil
நாம் எப்போதும் நமது வீட்டு சமையல் அறையாக இருந்தாலும் அல்லது வீடாக இருந்தாலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி சுத்தம் செய்வதற்கு சில மணி நேரம் ஒதுக்கி பார்த்து பார்த்து சுத்தம் செய்வோம். ஆனால் சில சமயம் அடுப்பில் எதாவது சமைத்து கொண்டிருக்கும் போது திரும்பி பார்ப்பதற்குள் அடுப்பில் இருக்கும் அந்த பொருள் பொங்கி கீழே பர்னரில் ஊற்றி விடும். கறை படிந்த அந்த பர்னரை சுத்தம் செய்வதற்குள் கை வலியே வந்து விடும். அதனால் உங்களுக்கு கை வலியும் இல்லாமல் கேஸ் பர்னரும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்வதற்கு இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள டிப்ஸினை ட்ரை செய்து பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
Kitchen Tips For The Home in Tamil:
டிப்ஸ்- 1
தேவையான பொருட்கள்:
- சமையல் சோடா- 1/4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1/2 ஸ்பூன்
- பேஸ்ட்- சிறிதளவு
கேஸ் பர்னர் சுத்தம் செய்வது எப்படி..?
நீங்கள் கேஸ் அடுப்பில் பால், குழம்பு மற்றும் டீ இது போன்ற பொருட்களை வைத்து இருப்பீர்கள். சில சமயத்தில் அது பொங்கி கீழே ஊற்றி அந்த இடம் முழுவதும் கறையாக இருக்கும்.
அந்த கறையை சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பேஸ்ட் மற்றும் மிதமான சூட்டில் இருக்கும் சுடு தண்ணீர் கொஞ்சம், 1/4 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள அந்த தண்ணீரை கறை படிந்துள்ள கேஸ் பர்னரை 10 நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள்.
10 நிமிடம் கழித்த பிறகு அந்த கேஸ் பர்னரை சுத்தம் செய்துவிட்டு பாருங்கள் பழைய கேஸ் புதியது போல பளபளக்கும்.
இதையும் படியுங்கள்⇒ பாத்ரூமில் உப்பு கரை படிந்த தரையை புதியது போல மாற்ற இந்த Tricks மட்டும் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |