கறை பிடித்துள்ள கேஸ் Stand புதியது போல பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Cleaning Tips Tamil

பொதுவாக அனைவரது வீட்டிலும் இன்றைய காலத்தில் கேஸ் அடுப்பு இருக்கிறது. சமைப்பதற்கு கேஸ் அடுப்பு மிகவும் ஈஸியாக இருக்கும். ஆனால் சமைத்த பிறகு அந்த கேஸ் அடுப்பு மற்றும் கேஸ் ஸ்டாண்ட் சுத்தம் செய்வது என்பது சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டமாக இருக்கும். இதனை சுத்தம் செய்வதற்குள் பெரும்பாடாக இருக்கிறது என்பது தான் பல பெண்களின் புலம்பலாக இருக்கிறது. நாம் அப்படியே சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அது பழைய அடுப்பாக மாறிவிடும். இனி நீங்கள் இது மாதிரி கஷ்டப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் கறை படிந்துள்ள கேஸ் Stand- டை  புதியது போல மாற்ற என்ன செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

How to Clean Gas Stand Stove:

gas stove stand cleaning in tamil

தேவையான  பொருட்கள்:

  • துணி துவைக்கும் பவுடர்- 2 ஸ்பூன்
  • வினிகர்- 2 ஸ்பூன் 
  • பேக்கிங் சோடா- 2 ஸ்பூன்

கேஸ் ஸ்டாண்ட் சுத்தம் செய்வது எப்படி..?

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்வதற்கு எடுத்து வைத்துள்ள கேஸ் Stand -டை அதில் போட்டு அதனுடன் 3 ஸ்பூன் அளவிற்கு வினிகர் எடுத்துக்கொண்டு அதனை கறைகள் இருக்கும் இடத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள்.

சிறிது நேரம் கழித்த பிறகு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள கேஸ் Stand-ன் மீது 2 ஸ்பூன் பேக்கிங் சோடா பவுடரை சேர்த்து அப்படியே 5 நிமிடம் வைத்து விடுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு கடைசியாக துணி துவைக்கும் பவுடர் 2 ஸ்பூன் மற்றும் கேஸ் Stand ஊற வைத்துள்ள பாத்திரத்தின் பாதியளவிற்கு தண்ணீரை ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

இப்போது நீங்கள் தண்ணீரில் ஊற வைத்துள்ள கேஸ் Stand- யை வெளியே எடுத்து Scrubber-ல் தேய்த்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரில் கழுவி விடுங்கள்.

இது மாதிரி செய்தால் போதும் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய கேஸ் Stand புதியது போல பளபளக்கும். உங்களுக்கு கை வலியும் இருக்காது.

இதையும் படியுங்கள்⇒ கறை படிந்துள்ள கேஸ் பர்னரை புதியது போல மாற்ற இதை மட்டும் பயன்படுத்துங்க…!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement