Best Way To Clean Combs in Tamil
நாம் அனைவருமே வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் பாத்து பாத்து அடிக்கடி சுத்தம் செய்வோம். ஆனால், நாம் பயன்படுத்தும் பொருட்களை பெரும்பாலும் சுத்தமாக வைத்து கொள்ள மாட்டோம். அதில் முக்கியமானது சீப்பு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு. எந்தவொரு பொருட்களை நாம் தினமும் அல்லது அடிக்கடி பயன்படுத்துகிறோம் என்றால் அதனை தான் நாம் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். எனவே நாம் தினமும் பயன்படுத்தும் சீப்பை 2 வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்வது அவசியம். இல்லையென்றால், முடி உதிர்வதற்கு இதுவே முதல் காரணமாக இருக்கும். ஆகவே உங்களுக்கு பயனுள்ள வகையில் அழுக்காக உள்ள சீப்பை எப்படி சுத்தம் செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips To Clean Comb in Tamil:
டிப்ஸ் -1
தேவையான பொருட்கள்:
- டிட்டர்ஜெண்ட் பவுடர் – 2 ஸ்பூன்
- சூடு தண்ணீர் – 3 டம்ளர்
முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சூடு செய்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பெரிய அகலமான மட்டும் குளியாக உள்ள தட்டை எடுத்து கொள்ளுங்கள். அதில் அழுக்காக இருக்கும் முடி சீவும் சீப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இதில், சூடு செய்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து, 2 ஸ்பூன் டிட்டர்ஜெண்ட் பவுடர் சேர்த்து 5 நிமிடம் வரை ஊறவிடுங்கள். சீப்பில் அதிக அழுக்கு இருந்தால் 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.
அதன் பிறகு, பழைய டூத் பிரஷினை பயன்டுத்தி லேசாக தேய்த்து எடுத்தால், சீப்பில் உள்ள அணைத்து அழுக்குகளும் நீங்கி புத்தம் புதுசு போல் ஜொலிக்கும்.
இறுதியாக, சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து துடைத்து உலர வைத்து விடுங்கள்.
கறைப்படிந்த டீ வடிக்கட்டியை நிமிடத்தில் புத்தம் புதுசாக மாற்ற டிப்ஸ்..!
டிப்ஸ் -2
தேவையான பொருட்கள்:
- சூடு தண்ணீர் – 3 டம்ளர்
- வினிகர் – 1 ஸ்பூன்
முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சூடு செய்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பெரிய அகலமான மட்டும் குழியாக உள்ள தட்டை எடுத்து கொள்ளுங்கள். அதில் அழுக்காக இருக்கும் முடி சீவும் சீப்பை சேர்த்து கொள்ளுங்கள்.
இதில், சூடு செய்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து, 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து 5 நிமிடம் வரை ஊறவிடுங்கள். சீப்பில் அதிக அழுக்கு இருந்தால் 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.
அதன் பிறகு, பழைய டூத் பிரஷினை பயன்டுத்தி லேசாக தேய்த்து எடுத்தால், சீப்பில் உள்ள அணைத்து அழுக்குகளும் நீங்கி புத்தம் புதுசு போல் ஜொலிக்கும்.
தோசை கல்லில் தோசை ஒட்டாமலும், பிஞ்சு போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |