5 நிமிடத்தில் கிச்சன் சிம்னியை சுத்தம் செய்வது எப்படி.?

Advertisement

How To Clean Kitchen Chimney in Tamil

பொதுவாக நாம் வீடுகளில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது பாத்ரூம் மற்றும் சமையலறை பகுதி தான். ஏனென்றால் சமையலறை மற்றும் பாத்ரூமை தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதில் கிச்சனை எடுத்துக்கொண்டால் அங்கு சுத்தம் செய்ய வேண்டியது பொருட்கள் அதிகமாக இருக்கும். அதாவது, கிச்சனில் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டும், சிங்கை சுத்தம் செய்ய வேண்டும் இதுபோன்ற பல பொருட்கள் சுத்தம் செய்ய வேண்டியது இருக்கும். எனவே, அந்த வகையில் கிச்சனியில் சுத்தம் செய்ய வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றான கிச்சன் சிம்னியை எப்படி சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கிட்சனில் சமைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் எண்ணெய் பிசுபிசுப்புகள், தூசுகள் போன்றவை சிம்னியில் ஒட்டிக்கொண்டு அழுக்காக மாறிவிடம். இதனை நாளடைவில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அதில் அதிகப்படியான அழுக்குகள் தேங்கி துர்நாற்றம் வீசக்கூடும். எனவே, உங்கள் வீடு சிம்னி எவ்வளவு அழுக்காக இருந்தாலும் சரி அதனை 5 நிமிடத்தில் புத்தம் புதியது போல் ஜொலிக்க வைக்ககூடிய எளிதான டிப்ஸ் பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிச்சன் சிம்னியை எளிதாக சுத்தம் செய்வது எப்படி.?

முதலில், சிம்னியின் வடிகட்டியை தனியே பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, கிச்சன் சிங்கிள் உள்ள ஓட்டையை அடைத்து விட்டு அதில், 3 ஸ்பூன் காஸ்டிக் சோடாவை போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து, சிம்னி வடிக்கட்டியை எடுத்து சிங்கிள் போட்டு கொள்ளுங்கள். இப்போது, தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஊற்றிக்கொள்ளுங்கள். அதாவது, சிம்னி வடிக்கட்டி வெந்நீரில் மூழ்குமாறு ஊற்றி கொள்ளுங்கள்.

 how to clean kitchen chimney easily in tamil

இப்போது, கையில் ஒரு உறை அணிந்து கொண்டும், ஒரு பிரஷ் பயன்படுத்தி சிம்னியயை நன்கு தேய்த்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் 5 நிமிடம் தேய்த்து விட்டாலே போதும் உங்கள் சிம்னியில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

இறுதியாக, சுத்தமான தண்ணீர் கொண்டு சிம்னியை கழுவி துடைத்து விடுங்கள்.

 kitchen chimney cleaning at home in tamil

இவ்வாறு நீங்கள் மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தாலே போதும் சிம்னியை சுத்தமாக வைத்து கொள்ளலாம்.

கிட்சன் சிங்கை 10 நிமிடத்தில் புதிது போல கிளீன் செய்யலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement