கஷ்டப்படாமல் வீட்டு டைல்ஸ் தரையை தினமும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம்..!

Advertisement

How to Clean Kitchen Tiles Home Remedies 

பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக இருந்தாலும் சரி அல்லது வீடாக இருந்தாலும் சரி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சுத்தம் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முதல் படியாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய வீட்டில் உள்ள டைல்ஸ் தரையினை எப்போதும் பளிச்சென்றும், சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும். ஆனால் அது தான் மிகவும் கடினமான வேலை. டைல்ஸ் சுத்தம் செய்வதற்க்கு என்று என்ன தான் நாம் தனியாக நேரம் ஒதுக்கி சுத்தம் செய்தாலும் கூட அது பளிச்சென்று இருக்குமா என்பதில் தான் சந்தேகமே இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஒரு பயனுள்ள டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம். அதாவது வீட்டு டைல்ஸ் தரையினை எப்படி வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டைல்ஸ் தரையை சுத்தம் செய்வது எப்படி..?

டைல்ஸ் தரையினை சுத்தம் செய்வதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • கல் உப்பு- 2 ஸ்பூன் 
  • எலுமிச்சை பழம்-
  • துணிதுவைக்கும் பவுடர்- 1/2 ஸ்பூன் 
  • பேக்கிங் சோடா- 1/2 ஸ்பூன் 
  • வினிகர்- 3 ஸ்பூன்

டைல்ஸ் தரையை சுத்தம் செய்வது எப்படி

முதலில் 1 எலுமிச்சை பழத்தில் இருக்கும் 1 பாதியை எடுத்துக்கொண்டு அதனை சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த சாற்றினை ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

இப்போது பவுலில் உள்ள சாற்றுடன் கல் உப்பு, துணி துவைக்கும் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் வினிகரையும் சேர்த்து நன்றாக ஒரு ஸ்பூனால் கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை டைல்ஸ் தரையில் எங்கு எல்லாம் கரை படிந்து இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் தெளித்து விடுங்கள்.

டைல்ஸ் சுத்தம் செய்வது எப்படி

பின்பு 10 நிமிடம் கழித்து தரையினை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் டைல்ஸ் தரை பளிச்சென்று மாறிவிடும்.

இத்தகைய முறையினை நீங்கள் வாரம் 1 முறை அல்லது தினமும் கூட என எப்படி வேண்டுனாலும் செய்யலாம்.

விடாப்பிடியான பாத்ரூம் உப்பு கறையை கூட 5 நிமிடத்தில் பளிச்சென்று மாற்றலாம் இப்படி செய்தால் 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement