How to Clean Kitchen Tiles in Tamil
நாம் முன்னோர்கள் நமக்கு அனைத்து விஷயங்களையும் சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லி தந்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக நமது முன்னோர்கள் நாம் வாழும் வீடுகளை எவ்வாறு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் சொல்லி தந்துள்ளார்கள். ஏனென்றால் நாம் நமது வீடுகளில் தான் அதிக அளவு நேரத்தை செலவு செய்கின்றோம். அதிலும் குறிப்பாக நமது வீடுகளில் உள்ள சமையலை அறையையே மிக மிக கவனமாக சுத்தமாக பராமரிக்க வேண்டும் ஏனென்றால் இங்கு தான் நமக்கு தேவையான உணவுகளை தயாரிக்கின்றோம். அதனால் தான் இன்றைய பதிவில் நமது சமையல் அறையின் தரையில் படிந்துள்ள வீடப்பிடி கறையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Clean Kitchen Tiles Easily in Tamil:
நாம் அனைவரின் வீட்டிலேயும் உள்ள சமையல் அறையை மிக சுத்தமாக பராமரிப்பது நமது மிக முக்கியமான கடமை ஆகும். அதனால் தான் நமது சமையல் அறையின் தரையில் படிந்துள்ள வீடப்பிடி கறையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம் – 5
- கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- ஷாம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
வெறும் 10 நிமிடத்தில் பாத்ரூம் பளபளப்பாக மாற எலுமிச்சை பழம் போதும்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 எலுமிச்சை பழங்களை இரண்டாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பிறகு இதனை நாமத்து சமையல் அறையின் தரையில் தெளித்து 10 நிமிடங்கள் அப்படியே இருக்க விடுங்கள். அதன் பிறகு லேசாக தேய்த்தலே அங்கு படிந்துள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
பின்னர் தண்ணீரை பயன்படுத்தி கழுவி அல்லது துடைத்து கொள்ளலாம்.
வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை தங்க முடியலையா அப்போ புதினாவை இப்படி பயன்படுத்துங்க போதும்
வீட்டில் கரையான் தொல்லை தாங்க முடியவில்லையா அதனை விரட்ட ஆரஞ்சு மட்டும் போதும்
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |