Kitchen Tiles Cleaning in Tamil
பெண்கள் அனைவருமே வீட்டில் அதிகமான நேரத்தை நாம் கிச்சனில் தான் செலவிடுகிறார்கள். சமைப்பது, சமைத்த பாத்திரத்தை சுத்தம் செய்து வைப்பது..? கிச்சன் பொருட்களை அடுக்கி வைப்பது.. முக்கியமாக கிச்சனை துடைத்து சுத்தம் செய்வது.. கிச்சனில் இருக்கும் வேலைகளில் பெரிய வேலை கிச்சனில் படிந்துள்ள எண்ணெய் பிசுபிசுப்பை சுத்தம் செய்வது தான். சமைக்கும்போது, கேஸ் அடுப்பின் பின்புறம் உள்ள சுவர் டைல்ஸில் எண்ணெய் மற்றும் ஆவி படிந்து கரையாக இருக்கும். எனவே இதனை எப்படி மிகவும் குறைவான நேரத்தில் ஈசியாக சுத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Clean Kitchen Wall Tiles Easily in Tamil:
தேவையான பொருட்கள்:
- தண்ணீர் – 2 டம்ளர்
- பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
- டிட்டர்ஜெண்ட் லிக்யூடு – 2 ஸ்பூன்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடு செய்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, இதில் டிட்டர்ஜெண்ட் லிக்யூடு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து எண்ணெய் கறை உள்ள கிச்சன் டைல்ஸில் தெளித்து விடுங்கள்.
2 நிமிடம் கழித்து ஒரு பழைய காட்டன் துணியை பயன்படுத்தி நன்கு துடைத்து கொள்ளுங்கள். டைல்ஸில் அதிக விடாப்பிடியான எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் அதனை காட்டன் துணிக்கு பதிலாக கம்பி ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து துடைத்து எடுத்து கொள்ளுங்கள்.
மீண்டும் ஒருமுறை நல்ல தண்ணீரில் துணியை நனைத்து டைல்ஸை துடைத்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் துடைத்து சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் கிச்சன் டைல்ஸ் பளிச்சென்று மாறிவிடும்.
இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் கிச்சன் டைல்ஸில் அதிக அழுக்கு சேராது.
கிச்சனில் இருக்கும்போது இந்த டிப்ஸ Follow பண்ணுங்க..! வேலை எளிதில் முடியும்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |