Microwave Oven Cleaning Tips in Tamil
இக்காலத்தில் சமையலறை பொருட்களின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்போது எளிதில் சமைப்பதற்கு ஏற்றவாறு பல கருவிகள் வந்துவிட்டது. அவற்றில் அதிகமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான் மைக்ரோவேவ் ஓவன். இப்போது இதனை பல வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோவேவ் ஓவன் மற்ற அடுப்புகளை விட வேகமாக உணவுகளை சமைக்கிறது. மேலும் குளிர்ந்த உணவுகளை எளிதில் வெப்பப்படுத்தி தருகிறது. எனவே இதன் மூலம் உணவுகளை ஈசியாக சமைத்து கொள்கிறோம். மைக்ரோவேவ் ஓவனில் எந்த அளவிற்கு எளிமையாக சமைக்கிறோமோ அந்த அளவிற்கு அதனை சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் மைக்ரோவேவ் ஓவன் விரைவில் பழுதடைவதோடு மட்டும் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கினையும் ஏற்படுத்தும். எனவே இப்பதிவில் மைக்ரோவேவ் ஓவனை எளிதில் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Clean Microwave Oven at Home in Tamil:
மைக்ரோவேவ் ஓவனை சுத்தம் செய்வதற்கு முன்பு, மைக்ரோவேவ் ஓவனிற்கு வரும் மின்சாரத்தை ஆஃப் செய்து கொள்ளவும்.
டிப்ஸ்- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இதில் டிஸ் வாஷ் சோப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இக்கலவையில் மைக்ரோஃபைபர் துணியை நனைத்து மைக்ரோவேவ் ஓவனின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
டிப்ஸ்- 2
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பேக்கிங் சோடா எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இப்பேஸ்டினை, மைக்ரோவேவ் ஓவனில் கறைகள் மற்றும் அழுக்குகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 5 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
அடுத்து, ஒரு ஈரமான துணியையோ அல்லது ஸ்பாஞ்ச் மூலம் நன்றாக துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு மீண்டும் ஒருமுறை ஈரமான துணியை வைத்து துடைத்து விட வேண்டும்.
பேக்கிங் சோடா ஒரு நல்ல கிளீனர் மட்டுமின்றி நல்ல கிருமிநாசியும் கூட. எனவே இதனை கொண்டு மைக்ரோவேவ் ஓவனை எளிதில் சுத்தம் செய்யலாம்.
டிப்ஸ்- 3
ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றினை பிழிந்து எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து மைக்ரோவேவ் ஓவன் உள்ளே வைத்து 5 நிமிடம் வரை அதிக வெப்பத்தில் வைக்கவும்.
பிறகு, அடுப்பை அணைத்து விட்டு மைக்ரோஃபைபர் துணியை கொண்டு உள்ளிருக்கும் அழுக்குகளை துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் மைக்ரோவேவ் ஓவனில் உள்ளிருக்கும் அழுக்குகளை எளிதில் அகற்ற முடியும்.
டிப்ஸ்- 4
மைக்ரோவேவ் ஓவனில் உணவுகளை சமைத்த உடனே அதில் இருக்கும் உணவு கசிவுகளை டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுக்கவும்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மைக்ரோவேவ் ஓவனின் தட்டுகளை அகற்றி துடைத்து சுத்தம் செய்து பிறகு செட் செய்யவும்.
மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்திய பிறகு சிறிது நேரம் மைக்ரோவேவ் ஓவனை திறந்து வைப்பதன் மூலம் அதில் உள்ள துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம்.
வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |