உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மிக்ஸி ஜாரை புதியது போல மாற்ற இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

how to clean mixi jar in tamil

மிக்சி ஜார் சுத்தம் செய்வது எப்படி.?

ஹாய் நண்பர்களே..! காலை, இரவு என இரண்டு வேலைகளிலும் டிபன் சாப்பிடுவது வழக்கம். அப்படி டிபன் சாப்பிடும் போது சட்னி வைப்பார்கள். சட்னி மட்டும் இல்லாமல் சாம்பார் வைப்பதற்கு தேங்காய், பூண்டு, இஞ்சி, இட்லி பொடி, மிளகாய் இன்னும் நிறைய பொருட்கள் அரைப்பதற்கு மிக்சி ஜாரை பயன்படுத்துகின்றன. அந்த பொருட்கள் எல்லாம் அரைக்கும் போது ஈஸியாக இருக்கும். அரைத்து முடித்த பிறகு அந்த மிக்சி ஜாரை சுத்தம் செய்வதற்கு சமைக்கும் தாய்மார்கள் கஷ்டப்படுவார்கள். இனிமேல் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். இன்றைய பதிவில் மிக்சி ஜாரை சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ தேங்காய் எண்ணெய் தயார் செய்ய இனி நீங்கள் கடைக்கு செல்ல வேண்டாம்…!

மிக்சி ஜார் சுத்தம் செய்ய செய்முறை விளக்கம்:

இல்லத்தரசிகள் அம்மியில் சமையலுக்கு தேவையான பொருட்களை அரைக்கும் காலம் எல்லாம் போய்விட்டது. இந்த காலத்தில் மிக்சியில் தான் எல்லா பொருட்களையும் அரைத்து வேலையை சுலபமாக்குகின்றனர். அரைத்து முடித்த பிறகு அந்த மிக்சி ஜாரை ஈஸியாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வெள்ளை வினிகர் 
  • பேக்கிங் சோடா 
  • சோப்பு திரவம் 
  • எலுமிச்சை பழத்தோல்

டிப்ஸ்- 1

மிக்சி ஜாரை சுத்தம் செய்வதற்கு வெள்ளை வினிகரை பயன்படுத்துங்கள். வெள்ளை வினிகரை எடுத்துக்கொண்டு மிக்சியில் கரையாக உள்ள இடத்தில் தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை சேர்த்து எப்போதும் போல சுத்தம் செய்து விடுங்கள்.

அதன் பிறகு மிக்சி ஜாரை கழுவிய பிறகு பார்த்தால் மிக்சி ஜார் சுத்தம் ஆகைவிடும் மற்றும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

டிப்ஸ்- 2

சமையலுக்கு பொருட்கள் அரைத்து முடித்த பிறகு மிக்சி ஜாரின் அடியில் சில மசாலா பொருட்கள் சுத்தம் செய்ய முடியாமல் அப்படியே இருக்கும். அப்போது நீங்கள் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சி ஜாரில் தடவி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு 15 நிமிடம் களித்து மிக்சி ஜாரை சுத்தம் செய்து விடுங்கள். இப்போது மிக்சி ஜாரை பார்த்தால் புதியது போல இருக்கும்.

உங்கள் வீட்டில் பொருட்கள் வீணாகாமல் இருக்க இதை                        தெரிந்துக்கொண்டால் போதும்..!

டிப்ஸ்- 3

சோப்பு திரவத்தை 2 சொட்டு மிக்சி ஜாரில் ஊற்றி அதன் பிறகு மிக்சி ஜாரை சுத்தம் செய்தால் மிக்சி ஜாரில் எந்த வித நாற்றமும் இல்லாமல் புதியது போல பளபளக்கும்.

டிப்ஸ்- 4

மிக்சி ஜாரில் உள்ள கரை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்கு எலுமிச்சை பழத்தின் தோலை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். அது மட்டும் இல்லாமல் மாதத்திற்க்கு 2 முறை மிக்ஸியின் அடி பக்கத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil