மிக்ஸி சுத்தம் செய்வது எப்படி
தினமும் நம்முடைய வீட்டில் நிறைய காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைக்கும் தேவையான சாபத்தினை அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்கிறோம். அதுவும் சிலரது வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் வேலைக்கு செல்வார்கள். இப்படி இருக்கையில் காலையில் வேக வேகமாக சாப்பாட்டினை செய்து விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இது மாதிரி அவசரமாக கிளம்பும் போது மிக்சி முதல் மற்ற பாத்திரங்கள் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு சென்று விடுவார்கள். மீண்டும் மறுநாள் இதேபோல் தான் நடக்கிறது. இப்படி இருக்கையில் தினமும் சாப்பிடும் சாப்பாட்டு பாத்திரத்தை கழுவி விடலாம். ஆனால் மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை சுத்தம் செய்வது என்பது கொஞ்சம் கடினம். அதனால் இன்றைய பதிவில் வீட்டில் பழைய மிக்சி போல் இருப்பதை பளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Clean Mixie:
வீட்டில் தினமும் சட்னி, தேங்காய் மற்றும் இதர பொருட்களை அரைக்க பயன்படுத்தும் மிக்சி பழையது அழுக்காக மாறிவிட்டால் அதனை எளிமையான முறையில் வெறும் 1 ஸ்பூன் பேஸ்ட் மூலம் பளிச்சென்று வைக்கலாம் எப்படி தெரியுமா..?
என்னென்ன பொருட்கள் தேவை:
- பல்துலக்கும் பேஸ்ட்- 1/4 ஸ்பூன்
- வினிகர்- 1/4 ஸ்பூன்
Cleaning Tips👇👇 வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..
சுத்தம் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த பவுலில் 1/4 ஸ்பூன் பேஸ்ட் மற்றும் 1/4 ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
ஒரு 5 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள Liquid-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்சியின் சுவிட்ச்-ஐ Off செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது தயார் செய்து வைத்துள்ள Liquid-ல் ஒரு மெல்லிய காட்டன் துணியினை நனைத்து அதனால் மிக்சியின் அனைத்து பகுதிகளையும் நன்றாக அழுக்கு போகும்படி துடைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்து மிக்சி ஜார் வைக்கும் அந்த இடுக்குகளிலும் மற்றும் மிக்சி ஜார் பின் புறங்களிலும் அழுக்குகள் காணப்படும். ஆகையால் ஒரு மெல்லிய வாருகோல் குச்சியினை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு மெல்லிய காட்டன் துணியினை சுற்றி அழுக்கு உள்ள இடைவெளிகளில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 5
இவ்வாறு துடைத்த பிறகு கடைசியாக மீண்டும் ஒரு முறை Liquid-ல் துணியினை நனைத்து சுத்தமான நன்றாக துடைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 6
பின்பு ஒரு சுத்தமான காட்டன் துணியினை வைத்து மிக்சியினை முழுவதுமாக துடைத்து 1/2 மணிநேரம் காய வைத்து விடுங்கள். இதுமாதிரி செய்தால் போதும் வீட்டில் அழுக்கு படிந்த மிக்சி புதியது போல பளிச்சென்று மாறிவிடும்.
அழுக்காக இருக்கும் சுவிட்ச் போர்டை புதியது போல் ஜொலிக்க வைக்க இந்த ஒரு பொருள் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |