How To Clean Steel Oil Can in Tamil
பெண்களுக்கு வீட்டில் இருக்கும் பெரிய வேலை என்றாலே அது பாத்திரம் கழுவும் வேலைதான். இந்த வேலை முடிந்தால் சமையலறையில் உள்ள பாதி வேலை முடிந்த மாதிரி. அதிலும் இந்த எண்ணெய் பாத்திரத்தில் உள்ள பிசுப்பிசுப்பை நீக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். எனவே இந்த எண்ணெய் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை எந்தவித கஷ்டமும் இல்லாமல் பத்தே நிமிடத்தில் சுலபமாக நீக்குவதற்கு சூப்பரான டிப்ஸ் ஒன்று உள்ளது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பெண்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் எண்ணெய் பிசுபிசுப்பு பாத்திரங்களை எளிதில் சுத்தம் செய்யவது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Clean Steel Oil Container in Tamil:
டிப்ஸ் -1
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, இத்தண்ணீர் ஆவிவரும் நிலையில் வந்தவுடன் இதில் நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்யூடு ஊற்றி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு இதனை நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடுங்கள். இவை நன்றாக கொதித்ததும் அடுப்பை ஆப் செய்து, அதில் 2 ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது, இந்த தண்ணீரில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரத்தை மூழ்க விடுங்கள். இதனை 10 அல்லது 15 நிமிடங்கள் இத்தண்ணீரில் ஊறவைத்து பிறகு பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப்பரை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு, இப்பாத்திரத்தை தண்ணீரில் கழுவினால் எண்ணெய் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
1 ஸ்பூன் உப்பு மட்டும் போதும் 1 நிமிடத்தில் பூஜை பாத்திரங்கள் தங்கம் போல் ஜொலிக்கும்..!
டிப்ஸ் -2
ஸ்டேப் -1
கை உள்ளே போகாத அளவிற்கு இருக்கும் சிறிய வாய் கொண்ட எண்ணெய் பாட்டில்களின் அடியில் கரை படிந்திருக்கும். இதனை நீக்க, பாட்டிலினுள் 1 ஸ்பூன் கல் உப்பு, 1 ஸ்பூன் ஹேண்ட் வாஷ் லிக்விட் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குலுக்கி விடுங்கள்.
ஸ்டேப் -2
இதனை 10 அல்லது 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு, தண்ணீரில் கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து பார்த்தால் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள எல்லா பாத்திரங்களும் பளிச்சென்று மாறிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |