How to Clean Otadai at Home in Tamil
நாம் அனைவருமே நமது வீட்டை மிகவும் சுத்தமாக பராமரிக்க நினைப்போம். அதனால் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம். ஆனாலும் நம்மையும் மீறி சில தவறுகள் ஏற்படும். அதேபோல் தான் நமது வீட்டின் தரைப்பகுதியை தினமும் சுத்தம் செய்து வைத்து கொள்வோம். ஆனால் நமது வீட்டின் மேற்கூரை பகுதியை சில நாட்களுக்கு ஒரு முறை அல்லது சில மாதங்களுக்கு ஒருமுறை தான் சுத்தம் செய்வோம். அப்படி செய்வதால் நமது வீட்டின் மேற்கூரையில் அதிக அளவு தூசிகள் சேர்ந்து ஒட்டடையாக மாறிவிடும்.
அதனை அடிக்கடி சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயல் ஆகும். அதனால் தான் இன்றைய பதிவில் கூறியுள்ள ஒரு குறிப்பினை ஒரு முறை செய்தால் மாதக்கணக்கில் உங்கள் வீட்டின் மேற்கூரையில் ஒட்டடை சேராமல் இருக்கும். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
ஒட்டடை வராமல் தடுக்க:
பொதுவாக நமது வீட்டின் மேற்கூரையில் படிந்துள்ள ஒட்டடை எளிமையாக நீக்கி நீண்ட நாட்களுக்கு வராமல் தடுக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- சூடம் – 4
- வினிகர் – 1/2 கப்
- தண்ணீர் – 1 வாலி
வெறும் 10 நிமிடத்தில் கேஸ் பர்னர் பளிச்சென்று மாற இதை ட்ரை பண்ணுங்க
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 சூடத்தை நன்கு பொடி பொடியாக செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 வாலி தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் வினிகரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இப்பொழுது ஒட்டடை அடிக்கும் குச்சினை எடுத்து அதில் ஒரு பழைய துணியை சுற்றி நாம் தயாரித்து வைத்துள்ள தண்ணீரில் நினைத்து எடுத்து நமது வீட்டின் மேற்கூரை பகுதி முழுவதும் தேய்த்து விடுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு உங்களது வீட்டின் மேற்கூரையில் ஒட்டடை படியாது.
வெறும் 2 பொருள் மட்டும் போதும் வெள்ளை துணியில் படிந்துள்ள சாய கறை சட்டுனு நீங்கிடும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |