How to Clean Pooja Items Easily in Tamil
நாம் அனைவரும் வீட்டிலேயும் பூஜைக்காக பயன்படுத்தும் பாத்திரங்கள் இருக்கும். அதனை சுத்தம் செய்வது என்பது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை போக்குவது என்பது தான் மிகவும் கடினமாக இருக்கும். அதனால் சுத்தம் செய்வதற்கென்றே நாம் தனியாக நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும்.
ஆனால் இனிமேல் அப்படி நீங்கள் கஷ்டப்பட்டு இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் எளிமையான முறையில் உங்க வீட்டில் இருக்கும் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கான ஒரு வழியை தான் இன்றைய பதிவில் பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன எளிமையான வழி என்பதை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Clean Pooja Items at Home in Tamil:
எளிமையான முறையில் உங்க வீட்டில் இருக்கும் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் இங்கு காண போகின்றோம் வாங்க..!
- மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
உப்பினை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் உப்பினையும் சேர்த்து கொள்ளுங்கள்.
பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் கலந்து கொள்ளுங்கள்.
வினிகரை சேர்க்கவும்:
இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கலந்து உங்க வீட்டு பூஜை பாத்திரங்களில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் பாத்திரம் தேய்க்கும் கம்பி நாரை பயன்படுத்தி தேய்த்து கழுவி கொள்ளுங்கள்.
இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் உங்களின் பூஜை பாத்திரங்கள் நன்கு பளபளப்பாக இருக்கும்.
என்னது வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை கை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்யலாமா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |