Pooja Pathiram Cleaning in Tamil
வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது என்பது கஷ்டமான ஒன்று. ஏனென்றால் அதில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் திரி எரிந்து கருமையாக இருக்கும். எனவே இவற்றை சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். பூஜை பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு புளி, லெமன், பீதாம்பரி போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆனால் அவை எல்லாம் இல்லாமல் உப்பு மட்டும் வைத்து சுத்தம் செய்யலாம். ஓகே வாருங்கள் உப்பு பயன்படுத்தி எப்படி பூஜை பாத்திரம் மற்றும் பித்தளை பாத்திரங்களை தங்கம் போல் ஜொலிக்க வைப்பது என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Clean Pooja Utensils in Tamil:
முதலில் பூஜை பாத்திரங்களை ஒரு பேப்பர் அல்லது துணி வைத்து துடைத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது ஹேண்டு வாஷ் லிக்யூடு சேர்த்து ஸ்பூன் வைத்த நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை ஒரு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு தேங்காய் நார் அல்லது கிரீன் ஸ்க்ரப்பை எடுத்து கொள்ளுங்கள்.
என்னது வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை கை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்யலாமா..? |
இந்த தேங்காய் நாரில், தயார் செய்து வைத்துள்ள உப்பு கலவையை எடுத்து பூஜை பாத்திரத்தை துடைக்க வேண்டும். தேங்காய் நார் பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை துடைப்பதன் மூலம் பாத்திரத்தின் இடுக்கில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பிசுபிசுப்புகள் எல்லாம் நீங்கி விடும்.
பாத்திரத்தின் எல்லா பகுதிகளிலும் படும்படி நன்றாக துடைக்க வேண்டும். பிறகு பாத்திரத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
நன்றாக கழுவிய பிறகு, துணியை வைத்து பாத்திரத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.
பிறகு சிறிதளவு விபூதி எடுத்து, பூஜை பாத்திரத்தில் தடவி கொள்ளுங்கள். பாத்திரத்தின் எல்லா பகுதிகளிலும் விபூதி வைத்து துடைத்த பிறகு ஈரப்பதம் இல்லாத துணியை வைத்து துடைத்தீர்கள் என்றால் பாத்திரத்தின் இடுக்குகளில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புகள் மற்றும் கருமை நிறம் எல்லாம் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
இவ்வாறு நீங்கள் பூஜை பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்தால் பாத்திரங்கள் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும்.
வீட்டை இப்படி கூட சுத்தம் செய்யலாமா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே.. |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |