உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

How to Clean Pooja Vessels in Tamil

How to Clean Pooja Vessels in Tamil

நாம் அனைவரின் வீட்டிலேயும் பூஜை பாத்திரங்கள் இருக்கும். அதனை சுத்தம் செய்வதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட்டு கைகளால் பலமாக தேய்த்து தான் சுத்தம் செய்திருப்போம். ஆனால் இனிமேல் அப்படி கஷ்டப்பட்டு கைகளால் பலமாக தேய்த்து சுத்தம் செய்ய தேவையில்லை.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்கள் எவ்வாறு எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதற்கான சில குறிப்புகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்கள் எளிமையான முறையில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Clean Pooja Vessels Easily in Tamil:

How to Clean Pooja Vessels Easily in Tamil

உங்கள் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்கள் எவ்வாறு எளிமையான முறையில் சுத்தம் செய்வது என்பதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. எலுமிச்சை பழம் – 2
  2. சோடா உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  3. உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  4. புளி – 1 எலுமிச்சை பழ அளவு

அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற பூஜை பாத்திரங்கள் அனைத்தும் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் சுத்தம் செய்ய போகும் பூஜை பாத்திரங்கள் போட்டு கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க

எலுமிச்சை பழத்தை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சேர்த்து  கொள்ளுங்கள்.

சோடா உப்பினை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

உப்பினை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உப்பினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே லிக்விட் செய்யலாம்..! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா

புளியினை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழ அளவு புளியினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி 1/2 மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். பின்னர் அதனை எடுத்து லேசாக தேய்த்து தூய்மையான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்களின் பூஜை பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறியிருப்பதை நீங்களே காணலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil