பூஜை அறையில் உள்ள வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வது எப்படி.?

Advertisement

Silver Pooja Items Cleaning

வெள்ளியினால் ஆன பூஜை பாத்திரங்களையும் கடவுள் சிலைகளையும் வீட்டின் பூஜை அறையில் வைப்பது நல்லது என்று அனைவர்க்கும் தெரியும். ஆனால், அந்த வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வது கடினம் என்று நினைக்கிறார்கள். வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதான ஒன்று. சிலர், வீட்டில் உள்ள வெள்ளி பூஜை அறை பொருட்களை கடைகளில் சுத்தம் செய்ய கொடுப்பார்கள். அப்படியில்லாமல் வீட்டிலே, வெள்ளியிலான பூஜை அறை பொருட்களை எளிமையாக சுத்தம் செய்யலாம். அதற்கான பதிவை இப்பதிவில் தொகுத்துள்ளோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து பூஜை அறையில் உள்ள வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வது எப்படி.?

 how to clean silver pooja items at home in tamil

குறிப்பு -1

பூஜை அறை வெள்ளி பொருட்களை சாம்பல் அல்லது விபூதியை பயன்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களும் வெள்ளியின் பிரகாசத்தை அதிகப்படுத்தும். சாம்பல் அல்லது விபூதியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இதனை வெள்ளி பொருட்களின் மேல் அப்ளை செய்து உங்கள் கைகளினால் நன்றாக தேய்த்து விடுங்கள்.

பிறகு, ஒரு மெல்லிய காட்டன் துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து விடுங்கள்.

குறிப்பு -2

தக்காளி கெட்ச்அப் அல்லது டூத்பேஸ்ட், வெள்ளி பாத்திரங்களுக்கு ஒரு நல்ல பளபளப்பை கொடுக்கும். முதலில், தக்காளி கெட்ச்அப் அல்லது டூத்பேஸ்ட்டடை வெள்ளி பொருட்களின் மேற்பகுதியில் அப்ளை செய்து மெல்லிய முட்களை கொண்ட டூத்பிரஷினை கொண்டு நன்றாக தேய்ந்து சுத்தம் செய்யுங்கள்.

பிறகு, அதனை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.

கிச்சன் எப்போதும் பளிச்சென்று இருக்க தெரிந்துக்கொள்ள கொண்டிய டிப்ஸ்..!

குறிப்பு -3

ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் சிறிய துண்டு அலுமினியத் தாள் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக நன்றாக கலந்து அதில் வெள்ளி பாத்திரங்களை போட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து துடைத்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், பூஜை அறையில் உள்ள வெள்ளி பாத்திரங்களை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்து கொள்ளலாம்.

கெமிக்கல் லிக்விடு இல்லாமல் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று சுத்தம் செய்ய இந்த 1 பொருள் போதும்.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement