1 நிமிடத்தில் வாட்டர் பாட்டில் மற்றும் பால் பிளாஸ்க் போன்றவற்றிலிருந்து வரும் நாற்றங்களை நீக்கலாம்.!

Advertisement

வாட்டர் பாட்டிலில் உள்ள நாற்றம் போக

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் சில்வர் வாட்டர் பாட்டிலில் உள்ள நாற்றம் போக்குவதற்கு என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம். சில்வர் வாட்டர் பாட்டில் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீரை தவிர பாலையும் ஊற்றி வைப்பார்கள். பாட்டிலில் பாலை ஊற்றி விட்டால் அதை மறுமுறை பயன்படுத்த முடியாது. ஆனால் இனிமேல் பாட்டிலில் எந்த நாற்றம் வந்தாலும் 1 நிமிடத்தில் நீக்கி விடலாம். வாங்க எப்படி நீக்குவது என்று படித்து தெரிந்துகொள்வோம்..!

இதையும் படியுங்கள் ⇒ ஒரு மாதத்திற்கான பாத்திரம் துலக்கும் லிக்விடை தயாரிக்க இந்த 4 பொருட்கள் போதும்.. வீட்டிலேயே தயார் செய்திடலாம்..

வாட்டர் பாட்டில் நாற்றத்தை போக்குவதற்கு என்ன செய்வது:

water bottle cleaning tips in tamil

 

ஸ்டேப்: 1

முதலில் நாற்றம் வரும் பாட்டிலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உள்பகுதியில் எலும்பிச்சை சாறு 1 தேக்கரண்டி, சிறிதளவு உப்பு, சிறிதளவு விம் லிக்விட் போன்றவற்றை சேருங்கள். பின் அந்த பாட்டில் முழுவதும் வெந்நீர் ஊற்றுங்கள். பிறகு ஒரு 1/2 மணி நேரம் அப்படியே ஊறட்டும்.

ஸ்டேப்: 2

பிறகு வாட்டர் பாட்டில் கழுவ பயன்படுத்தும் பிரஷை வைத்து தேயுங்கள்.தேய்த்த பிறகு பாட்டிலை இரண்டு அல்லது மூன்று முறை நல்ல தண்ணீரை ஊற்றி கழுவுங்கள். இப்போது பாருங்கள் பாட்டிலில் உள்ள நாற்றம் நீங்கி வாசமாக இருக்கும்.

வாட்டர் பாட்டிலில் மூடியை எப்படி சுத்தம் செய்வது: 

water bottle cleaning tips in tamil

ஸ்டேப்: 1

வாட்டர் பாட்டிலை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா.? பாட்டிலின் மூடியையும் நன்கு கழுவ வேண்டும். அதற்கு பாட்டிலின் மூடி கொள்ளும் அளவிற்கு ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

அதில் வெந்நீர், எலும்பிச்சை சாறு 1 தேக்கரண்டி, சிறிதளவு உப்பு, சிறிதளவு விம் லிக்விட் போன்றவை சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்: 3

பிறகு வாட்டர் பாட்டில் மூடியை கலந்து வைத்த தண்ணீரில் போட வேண்டும். பிறகு 1/2 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு மூடியின் உள்பக்கத்தை பிரஷை பயன்படுத்தி தேயுங்கள். இப்போது பாருங்கள் பாட்டிலின் மூடியில் ஒரு அழுக்கு கூட இருக்காது.

குறிப்பு:

முக்கியமானது நீங்கள் பாட்டிலை எப்பொழுது கழுவினாலும் தண்ணீர் இல்லாமல் மூடி வைக்க வேண்டும். கழுவிய உடனே அந்த ஈரத்தோடு பாட்டிலை மூடி வைத்தால் நாற்றம் ஏற்படும். இந்த தவறினை மட்டும் செய்யாதீர்கள் நண்பர்களே..!

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை பாட்டிலுக்கு மட்டுமில்லை பால் ஊற்றி வைக்கும் பிளாஸ்க், பிளாஸ்டிக் பாட்டில், சில்வர் குடம் போன்றவற்றில் நாற்றம் வந்தாலும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement