வெள்ளி பாத்திரம் பளிச்சிட
பெரும்பாலும் வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்வது கடினமான வேலையாகி விட்டது. வெள்ளி பாத்திரம் வாங்கும் போது புதிதாக தோன்றும். ஆனால் அது நாளடைவில் கருப்பாக மாறி விடும். அதனால் வெள்ளி பாத்திரத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அந்த வெள்ளி பாத்திரத்தினை எளிமையான முறையில் சுத்தம் செய்வதை பற்றி இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
வெள்ளி பவுல் :
முதலில் தட்டில் விபூதியை சேர்த்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி வெள்ளி பவுல் மீது மேல் வைத்து தேய்க்க வேண்டும். பிறகு வெள்ளி பவுலை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து பாத்திரத்தை சுத்தம் செய்து விட்டால் வெள்ளி பவுல் பளிச்சென்று மாறி விடும்.
வெள்ளி நகைகளை புதுசாக மாற்ற சிறந்த டிப்ஸ் இதோ..!
குங்குமச் சிமிழ் :
முதலில் ஒரு பவுலில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கலக்கவும். அதனை குங்கும சிமிழ் மீது கொஞ்சம் கொஞ்சமாக தேய்த்த பின்பு, 25 அதை நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதனை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, பின்பு அதனை ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்தால் பளபளப்பாக மாறி விடும்.
வெள்ளி விளக்கு:
முதலில் ஒரு தட்டை எடுத்து அதில் டூத் பேஸ்ட்டை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும். பின்பு அதனை வெள்ளி விளக்கில் அந்த பேஸ்ட்டை அப்ளை செய்து நன்றாக தேய்க்கவும். இதனை 10 நிமிடமாவது அப்படியே வைத்தி விட்டு தண்ணீரை கழுவ வேண்டும். பின்பு ஒரு காட்டன் துணி கொண்டு நன்றாக துடைத்தால் விளக்கு பளிச்சென்று மாறி விடும்.
வெள்ளி பூஜை பொருட்கள்:
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் ஊற்றி அதனுடன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அந்த தண்ணீரை இறக்கி அதில் எடுத்து வைத்து வெள்ளி பாத்திரத்தை போடவும். இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீர் விட்டு கழுவி, ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்தால் வெள்ளி பாத்திரம் பளிச்சென்று மாறி விடும்.
பேக்கிங் சோடா மட்டும் போதும் உங்கள் வெள்ளி நகைகளை 5 நிமிடத்தில் புதுசு போல மாற்றிவிடலாம்..!
வெள்ளி டம்ளர்:
சில்வர் பாத்திரத்தை சுத்தம் செய்யும் liquid எடுத்து கொள்ளவும். அதனை வெள்ளி டம்ளர் மீது தேய்க்க வேண்டும். இதனை 5 அல்லது 10 நிமிடம் தேய்த்து விட்டு, அதனை தண்ணீர் கொண்டு கழுவினால் வெள்ளி டம்ளர் பளபளப்பாக மாறி விடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |