How To Clean Switch Board in Tamil
அனைவருமே வீட்டை சுத்தமாகவும் நறுமணத்துடன் வைத்திருக்க பலவகையான முறைகளை கையாண்டு வருகிறார்கள். வீட்டை மட்டும் பார்த்து பார்த்து சுத்தம் செய்தால் மட்டும் போதாது வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். வீடு மட்டும் பளப்பளப்பாக இருந்து சுவிட்ச் போர்டு அழுக்காக இருந்தால் வீட்டின் அழகையே கெடுத்து விடும். இக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. சிறிது நேரம் கரண்ட் இல்லையென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஃபேன் இல்லாமலும் டிவி இல்லாமலும் நம்மால் இருக்கவே முடியாது. எனவே வீட்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருள் சுவிட்ச் போர்டு தான். இதனால் சுவிட்ச் போர்டு விரைவில் கருமையடைந்து அழுக்குகள் சேர்ந்து விடுகிறது. எனவே இவற்றை எளிதாக சுத்தம் செய்யும் முறையை தான் இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து அழுக்கான சுவிட்ச் போர்டை புதியது போல் ஜொலிக்க வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யும் முறை:
முதலில் மின்சாரத்தை துண்டிக்கவும்:
சுவிட்ச் போர்டை சுத்தம் செய்ய தொடங்கும் முன் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று வீட்டின் மின்சாரத்தை துண்டிப்பது. ஏனென்றால் சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யும் போதும் மின்சாரம் தாக்கும் அபாயம் இருக்கும். எனவே மின்சாரத்தை துண்டிக்காமல் சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யாதீர்கள். மேலும் சுத்தம் செய்யும் போது, கையுறைகள் மற்றும் காலில் செப்பல்கல்களை அணிந்து கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
வினிகரை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவிற்கு தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
என்னது வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை கை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்யலாமா
காட்டன் துணியை எடுத்து கொள்ளுங்கள்:
இப்போது காட்டன் துணியை எடுத்து தயார் செய்து வைத்துள்ள தண்ணீர் கலவையில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். பிறகு இத்துணியால் சுவிட்ச் போர்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் எண்ணெய் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் கறைகள் நீங்கி சுவிட்ச் போர்டு புதியது போல் ஜொலிக்கும்.
இதனையும் பயன்படுத்தலாம்:
பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளுங்கள்:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு காட்டன் துணியில் நனைத்து சுவிட்ச் போர்டை துடைத்து விடுங்கள். அதன் பின் ஒரு உலர்ந்த துணியால் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் சுவிட்ச் போர்டில் உள்ள கருமை நிறம் நீங்கி சுவிட்ச் போர்டு பளப்பளப்பாக இருக்கும்.
2 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யலாம் வீட்டில் உள்ள ஒரு பொருள்..!
மின்சாரத்தை உடனே இயக்க வேண்டாம்:
சுவிட்ச் போர்டை சுத்தம் செய்த பிறகு உடனே மின்சாரத்தை இயக்க வேண்டாம். சுவிட்ச் போர்டு ஈரப்பதம் இல்லாமல் நன்றாக உலர்ந்ததும் மின்சாரத்தை ஆன் செய்ய வேண்டும். அதாவது சுத்தம் செய்து 1/2 மணி நேரம் கழித்து மின்சாரத்தை ஆன் செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |