டீ வடிக்கட்டி சுத்தம் செய்யும் முறை
நம் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பயன்படுத்துவோம். பாத்திரம் சுத்தமாக கழுவவில்லை என்றால் ஒழுங்கா சுத்தம் பண்ணிருக்கியா என்றெல்லாம் கேட்போம். ஆனால் ஒரு பொருளை மறந்து விடுகிறோம். அதாங்க டீ, காபி வடிகட்டுவதற்கு பயன்படுத்தும் வடிகட்டியை மறந்து விடுகிறோம். இதனை கழுவுவார்கள், ஆனால் ஓரத்தில் அழுக்குகள் தேங்கி இருக்கும். இதனை அப்படியே நாம் பயன்படுத்துவதால் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் நிமிடத்தில் வடிகட்டியை சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
தீயில் காட்டி சுத்தம் செய்யலாம்:

அழுக்காக உள்ள மெட்டல் வடிக்கட்டி மற்றும் நார் வடிக்கட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து குறைவான தீயில் வைத்து கொள்ள வேண்டும், இதில் மெட்டல் வடிகட்டியை காட்ட வேண்டும். வடிகட்டியானது கருப்பாக மாறும் வரை காட்ட வேண்டும்.
அதன் பிறகு ஒரு பாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும், அதில் தண்ணீர் ஊற்றி துணி துவைக்கும் ப மற்றும் நார் வடிக்கட்டி இரண்டையும் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் வடிகட்டியில் உள்ள அழுக்குகள் நீங்கி புதிதாக இருக்கும்.
வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக இருக்க இந்த ஒரு லிக்விட் போதும்..!
உடனேயே கழுவ வேண்டும்:
வடிக்கட்டியை பயன்படுத்திய பிறகு மணி கணக்கில் கழுவாமல் இருந்தால் அதில் அழுக்கானது படிந்து விடும். அதனை உடனே கழுவி விட்டால் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். அதனால் வடிகட்டியை பயன்படுத்திய பிறகு சூடான தண்ணீர் அல்லது பச்ச தண்ணீரில் போட வேண்டும். இப்படி போடுவதால் உடனே தூள் எல்லம் நீங்கி விடும். இதனால் வடிக்கட்டி புதிது போல இருக்கும்.
பேக்கிங் சோடா:

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ள வேண்டும், இதில் பேக்கிங் சோடா சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் வடிகட்டியை சேர்த்து 1 மணி நேரம் ஊற விட வேண்டும். 1 மணி நேரம் கழித்து பார்த்தால் வடிகட்டியில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி வடிகட்டியானது பளிச்சென்று இருக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று குறிப்புகளில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தினாலே வடிக்கட்டி புதிது போல இருக்கும்.
வருடக்கணக்கில் புளி கறுப்பாகாமலும் புழு வண்டு வைக்காமலும் இருக்க டிப்ஸ்..!
| மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |














