Easy Way To Clean Tea Strainer in Tamil
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் நாம் சூப்பரான கிச்சன் டிப்ஸ் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அனைவரது வீட்டிலும் கிச்சனில் அதிகமாக பயன்படுத்தப்படுவது டீ வடிகட்டிதான். அதாவது, ஒரு நாளைக்கு எப்படியாவது மூன்று முறையாவது டீ போட்டு விடுவோம். இந்த டீ சாயம் வடிகட்டியில் ஒட்டிக்கொண்டு நாளடைவில் கருப்பாக கரைந்துப்படிந்துவிடும். இதனை கவனிக்காமல் அப்படியே பயன்படுத்தி வருவோம். ஆனால், டீ வடிக்கட்டியை இப்படி பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கான ஒன்று. எனவே கறைப்படிந்த கருப்பாக இருக்கும் டி டீ வடிக்கட்டியை எப்படி எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best Way To Clean Tea Strainer in Tamil:
டிப்ஸ் -1
தேவையான பொருட்கள்:
- சூடான தண்ணீர் -1 கப்
- ஆலா – 1/2 ஸ்பூன்
- டிட்டர்ஜெண்ட் பவுடர் – 1/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் அளவிற்கு சூடான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். அதில் டீ வடிக்கட்டியை வைத்து, 1/2 ஸ்பூன் ஆலா, 1/2 ஸ்பூன் டிட்டர்ஜெண்ட் பவுடர் செர்த்து 20 நிமிடம் வரை ஊறவையுங்கள்.
அதன் பிறகு, ஒரு பல் துலக்கும் பிரஷ் கொண்டு டீ வடிக்கட்டியை நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.
அதன் பிறகு, மீண்டும் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் சேர்த்து டீ வடிக்கட்டியை சேர்த்து ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் எவ்வளவு கரையாக உள்ள டீ வடிக்கட்டியம் புதுசாக மாறிவிடும்.
வாஷ்பேஷன் முதல் பாத்ரூம் வரை பளபளப்பாக இருக்க இந்த ஒரு லிக்விட் போதும்..!
டிப்ஸ் -2
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 2ஸ்பூன்
- சூடான தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் அளவிற்கு சூடான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள்.
இதில் டீ வடிக்கட்டியை போட்டு 15 நிமிடம் வரை ஊறவிடுங்கள்.
அதன் பிறகு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பல் துலக்கும் பிரஷினை கொண்டு பவுடரில் தொட்டு ஊறவைத்த டீ வடிக்கட்டியை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். இம்முறையை நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
வருடக்கணக்கில் புளி கறுப்பாகாமலும் புழு வண்டு வைக்காமலும் இருக்க டிப்ஸ்..!
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |