வெள்ளை சட்டையில் கறை நீக்குவது எப்படி
பொதுவாக துணிகளை துவைப்பது என்றாலே கஸ்டமான ஒன்றாக தான் இருக்கிறது. அதிலும் இந்த வெள்ளை துணிகளை துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிடுவிடும். ஒயிட் டிரஸ் போட்டாலே அம்மாக்கள் கீழ் உட்காராதே பார்த்து பத்திரமா போட்டுக்கோ, அழுக்கு ஆக்கிடாத என்று கூறுவார்கள். ஆனால் வெள்ளை சட்டையில் ஏதாவது சிறியதாக ஏதும் கறை பட்டாலே அதை மறுபடியும் நம்மால் பயன்படுத்த முடியாது. அந்த கறையானது அசிங்கமாக தனியாக தெரியும். அதனால் இந்த பதிவில் வெள்ளை சட்டையில் உள்ள கறைகளை நீக்குவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்க டிப்ஸ்:1
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா, பல் துலக்கும் பேஸ்ட், வினிகர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதனை வெள்ளை சட்டையில் கறைகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு வெள்ளை சட்டையை லேசாக தேய்த்தாலே கறைகள் நீங்கி விடும்.
இரண்டே நிமிடத்தில் அழுக்கு படிந்த வெள்ளை சட்டையை கறை இல்லாமல் பளிச்சென்று மாற்றலாம்
வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்க டிப்ஸ்:2
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சரி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கறைகள் உள்ள இடத்தில் அப்பளை செய்து 20 நிமிடத்திற்கு ஊற விடவும்.
20 நிமிடம் கழித்து சட்டையை வெந்நீரில் நினைத்து சோப்பை பயன்படுத்தி தேய்த்து விட்டு பிரஷை வைத்து தேய்க்க வேண்டும். இப்படி செய்தாலே வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்கி விடும்.
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க..!
வெள்ளை சட்டை பளிச்சென்று இருக்க:
வெள்ளை சட்டை பளிச்சென்று இருக்க வேண்டுமென்றால் வெந்நீரில் துவைப்பது தான் சிறந்தது.
அது போல கஞ்சியில் வெள்ளை துணிகளை துவைத்தாலும் பளிச்சென்று இருக்கும்.
முக்கியமாக வெள்ளை துணிகளை துவைக்கும் போது எந்த துணிகளுடனும் சேர்த்து ஊற வைக்க கூடாது. ஏனென்றால் மற்ற சட்டைகளில் உள்ள சாயங்கள் துணிகளில் இறங்கி விடும். அதனால் இதனை தனியாக வைத்து தான் துவைக்க வேண்டும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |