5 நிமிடம் போதும் அழுக்கு படிந்த வெள்ளை Shoe-ஐ புத்தம் புதிதாக மாற்றிடலாம்..!

How to Clean White Shoes in Tamil

How to Clean White Shoes in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்னைக்கி நாம ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது யாரெல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ள Shoe பயன்படுத்துகிறீர்களோ அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது பொதுவாக நாம் வெள்ளை நிறத்தில் உடை போட்டுகொண்டாள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கறைபடாமல் பார்த்துக்கொள்வோம். ஆனால் காலில் போட்டுக்கொள்ளும் Shoe-ஐ கண்டிப்பாக நம்மால் அப்படி பாதுக்காக்க முடியாது. கண்டிப்பாக அதில் கறை அதிகமாக படிந்து அதனுடைய நிறத்தையே கெடுத்துவிடும். குறிப்பாக அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் படாத பாடுபட வேண்டியதாக இருக்கும். இனி அப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளை நிறத்தில் உள்ள சூவில் கறை பட்டு விட்டது என்றால் இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

5 நிமிடம் போதும் அழுக்கு படிந்த வெள்ளை Shoe-ஐ புத்தம் புதிதாக மாற்றிடலாம்..!

தேவையான பொருட்கள்:

  1. பல் துலக்கும் பேஸ்ட் – மூன்று ஸ்பூன்
  2. கோலமாவு – ஒரு கைப்பிடியளவு
  3. பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
  4. வினிகர் – ஒரு ஸ்பூன்
  5. பல் துலக்கும் பிரஸ் – ஒன்று (பழையது)

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மூன்று ஸ்பூன் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட், கோலமாவு ஒரு கைப்பிடியளவு, பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், வினிகர் ஒரு ஸ்பூன் மற்றும் பேஸ்ட் பதத்திற்கு கலவையை கலக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் கலவை தயார்.

பயன்படுத்தும் முறை:

இந்த கலவை சூவில் எங்கெல்லாம் கறை, அழுக்கு உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்து பல் துலக்கிய பழைய பிரஷை பயன்படுத்து ஒரு 5 நிமிடம் மட்டும் அழுத்தமாக தேய்த்தால் போதும் அழுக்கு படிந்த பழைய சூ புதிய சூவாக மாறிவிடும். பிறகு அதனை சுத்தமாக கழுவி பார்த்தால் புத்தம் புதிதாக வாங்கிய சூ போல் இருக்கும்.

இந்த டிப்ஸ் கண்டிப்பாக இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். பயனுள்ளதாக இருந்திருந்தால் இந்த பதிவுக்கு ஒரு லைக் போடுங்க, அப்படியே உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை வைக்காமலேயே பழைய வெள்ளை துணியை புதியது போல மாற்றுவதற்கும் வாசனையாக வைப்பதற்கும் இந்த ஒரு டிப்ஸ் போதும்..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil