பழைய புடவையை 10 நிமிடத்தில் மெத்தையாக மாற்றிடலாம்.. அதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க

Advertisement

How to Convert Old Saree Into Sleeping Bed in Tamil

அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக படுப்பதற்கு மெத்தை இருக்கும் என்று சொல்ல முடியாது. பலரது வீட்டில் பாயில் தான் உறங்குகின்றன. அத்தகைய பாயினை கூட நாம் மெத்தையாக மாற்ற முடியும், அதற்கான டிப்ஸை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். பாயை எப்படி மெத்தையாக மாற்ற முடியும் என்று யோசிக்கலாம், நிச்சயம் மெத்தையாக மாற்றலாம். அதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு பழைய புடைவை தேவைப்படும் அவற்றில் ஒரு புடவை மட்டும் காட்டன் புடவையாக இருக்க வேண்டும். மேலும்  தைப்பதற்கு நூல், குண்டூசி தேவையான அளவு மற்றும் பெரிய கை ஊசி ஒன்று தேவைப்படும். இதனை வைத்து பாயை நாம் மெத்தையாக மாட்டிடலாம். சரி அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

பழைய புடவையை மெத்தையாக மாற்றிடலாம்.. அதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பாய், 6 புடவை (அவற்றில் ஒன்று காட்டன் புடவையாக இருக்க வேண்டும்), மொத்தமான ஊசி ஒன்று, மொத்தமான நூல்கண்டு ஒன்று, குண்டூசி இவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு தரையில் பாயை விரித்து போடவும், பின் ஒவ்வொரு புடவையாக பாயில் விரித்து போடவும். கடைசியாக காட்டன் புடவையை விரித்து போடுங்கள்.

பாயில் விரித்து போட்டிருக்கும் புடவையின் அகலம் பெரியதாக இருந்தால் பரவா இல்லை அதனை நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் பாயில் விரித்திருக்கும் புடவையின் நீளம் பெரியதாக இருக்க கூடாது ஆக நீளத்தின் இரண்டு பக்கமும் நான்கு இஞ் மட்டும் வரும்படி புடவையின் துணியை வைத்துக்கொள்ளுங்கள், மீதமுள்ள துணிகளை கட் செய்திடவும்.

ஸ்டேப்: 3

பாயில் புடவைகளை விரித்து போட்ட பிறகு புடவை விலகாமல் இருக்க குண்டூசியை பயன்படுத்தி நான்கு ஓரங்களிலும் குத்திவிட வேண்டும். குண்டூசி பாயில் குத்தினால் வளைந்துவிடும் ஆக ஆறு புடவைகளை மட்டும் சேர்த்து குண்டூசியால் பின் (pin) செய்து கொள்ளுங்கள்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்

ஸ்டேப்: 4

பிறகு ஒவ்வொரு பக்கமாக மடித்து கை ஊசியால் தைத்து வர வேண்டும், அப்படி தைக்கும் போது குண்டூசியை அவற்றில் இருந்து எடுத்துவிடுங்கள்.

ஸ்டேப்: 5

முழுமையாக தைத்த பிறகு உங்கள் பாய் இப்படி தான் இருக்கும். அவ்வளவு தான் பழைய புடவையில் பெட் தயாராகிவிட்டது. இது மாதிரி உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

ஏன் வீணாக பழைய புடவைகளை பாத்திரம் விற்பனை செய்பவர்களிடம் போட வேண்டும். இதுபோல் பழைய புடவையை நாம் நமக்கு பயனுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம். இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்திரம் கழுவுவதில் இப்படி ஒரு Idea இருக்கா தெரியாம போச்சே..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement