How to Deep Clean the Kitchen Sink in Tamil
இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கின்றார்கள். அதிலும் ஒரு சிலர் தங்களது துறையில் பல வகையான சாதனைகளையும் படைத்து வருகின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்களுக்கும் வீடு வேலை செய்வது என்பது மிக மிக கஷ்டமாக உணர்வார்கள். ஏனென்றால் பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை பார்த்தால் அவர்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன்பு வரை நமது வீடுகளில் பல வேலைகளை செய்வார்கள். அதிலும் ஒரு சில வீட்டு வேலைகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது வீட்டினை சுத்தம் செய்வது சமையல் அறையினை சுத்தம் செய்வது போன்றவை மிக மிக கடினமான வேலை ஆகும். அதிலும் சமையல் அறையில் உள்ள சிங்க் தொட்டியை சுத்தம் செய்வதற்குள் நமது பாடு பெரும்பாடாக போய்விடும். அதனால் தான் இன்றைய பதிவில் சமையல் அறையில் உள்ள சிங்க் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மிகவும் எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Kitchen Cleaning Tips in Tamil:
நமது வீடுகளில் அதிக அளவு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான இரண்டு இடங்கள் என்றால் அவற்றில் ஒன்று பாத்ரூம் மற்றொன்று சமையல் அறை இவ்விரண்டு இரண்டு இடங்களும் நமது வீட்டில் சுத்தமாக இருந்தால் நமது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மிக மிக சிறப்பாக காணப்படும்.
அதனால் தான் நமது சமையல் அறையின் சிங்க் தொட்டியினை மிகவும் எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம் – 1
- உப்பு – 1 கைப்பிடி அளவு
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- செய்தி தாள் – 1
கிச்சனில் படிந்துள்ள எண்ணெய் பிசு பிசுப்பை நிமிடத்தில் போக்க எலுமிச்சை பழம் போதும்
செய்முறை:
முதலில் நாம் சமையல் அறையின் சிங்க் தொட்டியில் உள்ள உணவு குப்பைகளை நிக்கிவீட்டு அந்த தொலையில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை போட்டு கொள்ளுங்கள்.
பின்னர் அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 1 எலுமிச்சை பழத்தின் சாற்றினை பிழிந்து கொள்ளுங்கள். இப்பொழுது அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 1 செய்தி தாளினை வைத்து அடைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு 10 நிமிடங்கள் கழித்து அந்த செய்தி தாளினை எடுத்துவிட்டு தேவையான அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஊற்றி கொள்ளுங்கள். இதன் மூலம் நமது சிங்க் தொட்டியின் அடைப்புகள் அனைத்து நீங்கிவிடும்.
1 மாதம் வரை தக்காளி கெட்டு போகாமல் இருக்க 1 டீஸ்பூன் எண்ணெய் போதும்
பாத்ரூம் டைல்ஸில் பல வருஷமா படிந்துள்ள உப்பு கறையை 10 நிமிடத்தில் போக்க தயிர் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |