காபி தூளில் கலப்படம்
பெரும்பாலும் இன்றைய இலையில் உணவு உண்பவர்களை விட டீ, காபி குடிப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 5 டீக்கு மேல் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். அதுபோல டீ பிரியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறர்களோ அதே அளவிற்கு காபி பிரியர்களும் இருக்கிறார்கள். அதுபோல நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் கலப்படம் இருக்கிறது. இவ்வளவு ஏன் நாம் அன்றாடம் குடிக்கும் பசும்பால் கூட கலப்படம் செய்யப்பட்டு தான் நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் இன்று நாம் காபி தூளில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
காபி தூளில் கலப்படம் இருப்பதை கண்டறிய டிப்ஸ்..!
பொதுவாக நம்மில் பலரும் காபி பிரியர்களாக இருப்பார்கள். அவ்வளவு ஏன் இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் நீங்கள் கூட காபி பிரியர்களாக இருக்கலாம் அல்லவா..! அப்படி அனைவருமே காபி குடித்து வருகிறார்கள். இந்த நிலையில் காபி தூளில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி என்று நம்மில் பலருக்கும் பல கேள்விகள் இருக்கும்.
பொதுவாக காபி தூளில் பயன்படுத்தப்படும் கலப்படங்கள் சிக்கரி, கேரமல் மற்றும் பேரீச்சம்பழ விதைகள் ஆகும். இவை பொதுவாக அரைக்கும் முன் காபி பீன்களுடன் கலக்கப்படுகின்றன. அப்படி காபி தூளில் கலப்படம் இருப்பதை எப்படி கண்டறிவது என்று இங்கு காணலாம்.
கலப்படம் உள்ள உணவுகளை கண்டறிவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா |
டிப்ஸ் – 1
முதலில் உங்கள் கைகளால் சிறிது காபி தூளை எடுத்து உங்கள் விரல்களுக்கு இடையில் வைத்து தேய்க்கவும். அப்படி தேய்க்கும் போது அது தூள் போல இருந்தால் அதில் சிக்கரி சேர்க்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். காரணம் காபி தானியங்கள் கடினமாகவும் பெரியதாகவும் இருக்கும்.
டிப்ஸ் – 2
ஒரு தட்டில் ஒரு சிட்டிகை காபி தூள் எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து அதன் மீது ஒரு சொட்டு தண்ணீர் ஊற்றவும். அந்த தண்ணீரை எளிதில் உறிஞ்சி மென்மையாக மாறினால், அதில் சிக்கரி உள்ளது என்று அர்த்தம். தண்ணீரை உறிஞ்சுவதற்கு நேரம் எடுத்து கடினமாக இருந்தால் அது தான் கலப்படம் இல்லாத காபி தூள் ஆகும்.
சாப்பிட்ட உடன் டீ குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த சின்ன அட்வைஸ் கேட்டுக்கோங்க
டிப்ஸ் – 3
ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பி கொள்ளுங்கள். அதன் மீது ஒரு சிட்டிகை காபி பொடியை மெதுவாக தூவுங்கள்.
- அப்படி தூவும் போது காபி தூள் சிறிது நேரம் மிதந்தால், அதில் கலப்படம் இல்லை என்று அர்த்தம்.
- அதுவே காபி தூள் விரைவாக மூழ்கினால், அதில் சிக்கரி அல்லது வேறு ஏதேனும் விதை கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
- அதுபோல காபி தூள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் தோன்றினால், அதில் கேரமல் அல்லது சிக்கரி உள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |