உங்கள் துணி வெளுத்து போச்சுன்னா இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்..!

Advertisement

உங்கள் துணி வெளுத்து போச்சுன்னா இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்..!

How to Dye Clothes at Home Tamil – பொதுவாக நமக்கு பிடித்த ஆடைகளை தான் துணிக்கடைகளுக்கு சென்றால் வாங்குவோம். அப்படி வாங்கும் பட்சத்தில் அந்த ஆடையை நிறைய முறை வெளியிடங்களுக்கு சென்று வரும்பொழுது அணிந்திருப்போம். அப்படி அடிக்கடி அந்த உடையை அணிந்து கொள்வதினால் அந்த உடையில் உள்ள நிறம் வெளுத்து போயிருக்கும். இருப்பினும் அந்த ட்ரெஸ் எந்த ஒரு விதத்திலும் சேதம் அடைந்திருக்காது கலர் மட்டும் தான் வெளுத்து போயிருக்கும். வெளுத்து போன உடையையும் நாம் வெளியிடங்களுக்கு போட்டு செல்ல முடியாது. அந்த உடையை தூக்கி எறியவும் மனசு இருக்காது. இனி துணி வெளுத்து போயிடிச்சே என்று கவலைப்பட வேண்டாம். அதற்கு ஒரு அருமையான டிப்ஸ் இருக்குறது அதனை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது படித்தறியலாம்.

இந்த டிப்ஸிற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. சூடான நீர் – ஒரு வாளி (1/2 வாளி தண்ணீர் போதும்)
  2. உப்பு – ஒரு கைப்பிடியளவு
  3. சாயம் பொடி அல்லது லிக்விட் –  உங்களுக்கு எந்த நிறம் தேவையோ அந்த நிறத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.

செய்முறை:

அரை வாளிக்கு தேவைப்படும் தண்ணீரை அடுப்பில் நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

தண்ணீர் சூடானது அடுப்பில் இருந்து இறக்கி வாளி அல்லது அகலமான பாத்திரத்தில் அந்த தண்ணீரை மாற்றி கொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் ஒரு கைப்பிடியளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சாயம் பொடி அல்லது கலர் லிக்விட் 5 துளிகள் சேர்த்து ஒரு குச்சியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு வெளுத்து போன ட்ரெஸ்ஸை அவற்றில் சேர்த்து நன்றாக தண்ணீர் முழும்படி குச்சியை பயன்படுத்தி உள்ளே அழுத்திவிடுங்கள்.

பின் 1/2 மணி நேரம் கழித்து ஊறவைத்த துணியை வெளியே எடுத்து எப்பொழுதும் போல துவைத்துவிட்டு நன்றாக அலசிவிடுங்கள். அலசும் பொழுது சாயங்கள் வரும் தான் அதனை கண்டு பயம்கொள்ள வேண்டும். அலசி வெயிலில் காயப்போடுங்கள், துணி காய்ந்தவுடன் நீங்கள் கண்கூட காண்பிர்கள் நிறம் மாறியிருப்பதை.

குறிப்பு:

துணிகளை வெயிலில் கவைக்கும்பொழுது அதிக நேரம் வெயிலில் காய வைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக துணி வெளுத்து தான் போகும். ஆக அதிக நேரம் வெயிலில் துணியை காயபோடாதிங்க.

அதேபோல் துணிகளை வெயில் காயவைக்கும் பொழுது துணியின் உள்பகுதியை திருப்பி போட்டு காயவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் துணி வெளுத்து போவதை தவிர்க்க முடியும்.

மேலும் இந்த டிப்ஸ் காட்டன் துணிகள் மற்றும் ஜீன்ஸில் செய்யப்பட்ட துணிகளுக்கு மட்டுமே முழுமையான ரிசல்ட்டை கொடுக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 உங்கள் வீட்டிலில் மிதியடிகளை துவைக்க கஷ்டப்படுவீர்களா? அப்படினா அது உங்களுக்கான பதிவு தான்!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement