நீங்க வாங்குறது நல்ல முட்டையான்னு எப்படி கண்டுபிடிக்கிறது.?

Advertisement

நல்ல முட்டை கண்டுபிடிப்பது எப்படி.?

நாம் பொதுவாக கடைக்கு சென்று காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள் போன்றவற்றை வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் போது நல்ல காய்கறி, கெட்டு போன காய்கறி போன்றவை இருக்கும். இதனை நாம் பார்த்த உடனே கண்டுபிடித்து விடலாம். அதில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே முட்டை சாப்பிடுவோம். இதில் நல்ல முட்டை எது, கெட்டு போன முட்டை எது என்று பார்த்து வாங்க மாட்டோம். வீட்டிற்கு வந்து சமைத்த பிறகு தான் கெட்டு போன  முட்டை என்று தெரியும். அப்போ காசு கொடுத்து வாங்கின முட்டை வேஸ்ட் தானே. அதனால் தான் இந்த பதிவில் நல்ல முட்டை, கெட்ட முட்டை கண்டுபிடிப்பது எப்படி என்று தெறித்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நல்ல முட்டை கெட்டு போன முட்டை கண்டுபிடிப்பது எப்படி.?

முட்டை வாங்கும் போது நல்ல வெண்மை நிறத்தில் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். வெண்மை நிறத்தில் இருந்தால் அவை நல்ல முட்டை, அதுவே கலர் மங்கலாக இருந்தால் கெட்டு போன முட்டை.

முட்டையை காதின் ஓரத்தில் வைத்து அசைக்க வேண்டும், அசைக்கும் போது சத்தம் கேட்டால் அவை கெட்டு போன முட்டை.

நல்ல முட்டை கண்டுபிடிப்பது எப்படி

எந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்கவேண்டும் தெரியுமா..?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ள்வும், அதில் முட்டையை போட வேண்டும். முட்டை அடிப்பகுதி சென்றால் அவை நல்ல முட்டை, அதுவே  முட்டை தண்ணீரில் மிதந்தால் கெட்டு போன முட்டை.

முட்டையை தோசைக்கல்லில் சமைக்கும் போது பொரிந்து வந்தால் நல்ல முட்டை, அதுவே தோசை கல்லில் ஓடினால் கெட்டு போன முட்டை அதை நாம் சாப்பிட கூடாது.

முட்டையை உடைத்து பார்க்கும் பொழுது வெள்ளை கருவானது வெள்ளை நிறத்தில் இருந்தால் அவை நல்ல முட்டை, அதுவே நிறம் மங்கலாக இருந்தால் நல்ல முட்டையல்ல.

முட்டையை உடைத்து பார்க்கும் பொழுது மஞ்சள் கருவானது வட்டமாக இல்லாமல் சிதறி இருந்தால் அவை கெட்டு போன முட்டை.

முட்டையை எப்படி சாப்பிடுவது நல்லது:

முட்டையில் சால்மோனெல்லா என்ற கிருமி உள்ளது, அதனால் பச்சையாக சாப்பிடாமல் சமைத்து சாப்பிடுவது நல்லது.

நாட்டு கோழி முட்டையை சாப்பிடலாம், அதுவே வேக வைத்து சாப்பிட்டால் சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.

நல்ல மீன் எது? பழைய மீன் எது? என்று பார்த்து வாங்குவது எப்படி? இந்த விஷயத்தை மட்டும் தெரிந்திக்கோங்க போதும்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement