How to Find Your Skin Type in Tamil
அனைவருக்கும் இந்த கேள்வி இருக்கும் என்று சொல்ல முடியாது. யாராவது சிலருக்கு மட்டும் தான் இதுபோல் கேள்வி இருக்கும் அது என்ன தெரியுமா..? இரவு தூங்கி எழுந்தால் முகத்தில் எண்ணெய் வலிக்கிறது. அது ஏன் என்ற கேள்வி தான். அதேபோல் சிலருக்கு முகமானது வறண்ட நிலையில் இருக்கும் இது ஏன் இப்படி உள்ளது என்று ஒரே கேள்வியாக இருக்கும். இதுபோல் பலருக்கும் நிறைய கேள்வி இருக்கும். இப்போது சிலருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால் நம்முடைய முகம் என்ன வகையை சார்ந்தது. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான். சரி இப்போது அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம் வாங்க..!
How to Find Your Skin Type in Tamil:
நம்முடைய முகத்தில் எப்படி ஆயில் வலிக்கிறது என்றால் முகம் ஆயில் சருமம் என்கிறார்கள். இதனை எப்படி கண்டுபிடிப்பது என்றால், இரவு தூங்குவதற்கு முன்பு எப்போதும் போல் முகத்தை சுத்தபடுத்திவிட்டு, அதன் பின் துண்டை வைத்து வேகமாக துடைக்காமல் பொறுமையாக துடைக்க வேண்டும்.
பின் ரூமில் Ac போடுவீர்கள் என்றால் அதை On செய்யாமல் சாதாரணமாக ரூம் டெம்பரேச்சரில் தூங்கவும். அதன் பின் காலையில் எழுந்து முகத்தை பார்த்தால் முகத்தில் எண்ணெய் வலிந்திருக்கிறது என்றால் உங்கள் முகம் ஆயில் ஸ்கின் வகையை சார்ந்தது.
பனிக்காலத்தில் பொலிவிழந்து காணப்படும் முகம் நன்கு பொலிவு பெற இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!
ஆயில் இல்லாமல் முகம் முழுவதும் வறட்டு போகியிருந்தால் உங்கள் முகம் ட்ரை ஸ்கின் வகையை சார்ந்தது.
அதேபோல் நெற்றி பகுதி மட்டும் ஆயில் வலிக்கிறது. கண்களுக்கு கீழ் பக்கம் வறண்டு இருந்தால் உங்கள் முகம் Combination Skin வகையை சார்ந்தது.
மேல் சொன்ன எதுவும் எனக்கு அறிகுறி இல்லை என்றால் உங்களுக்கு சாதாரண முகம் வகையை சார்ந்தது எனலாம்.
அதேபோல் முகத்தில் அங்கு அங்கு சிவப்பு நிறத்தில் உள்ளது எரிச்சலாக உள்ளது என்றால் Sensitive Skin வகையை சார்ந்தது என்று அர்த்தம். இதுமட்டுமில்லாமல் நம்முடைய முகம் இப்படியே இருக்கும் என்று அர்த்தம் இல்லை. சீசனுக்கு ஏற்ற மாறி மாறிவிடும்.
முகம் பளபளப்பாக இருக்க கிளிசரின் அழகு குறிப்புகள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |