May The House Always Be Fragrant
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அனைவருமே வீடு எப்பொழுதும் சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக கடைகளில் கிடைக்கும் ரூம் ஸ்ப்ரே வாங்கி வந்து பயன்படுத்துவார்கள். இதனால் கெமிக்கல் சேர்க்கப்பட்ட ரூம் ஸ்பிரேவை நாம் பயன்படுத்தும் போது இன்று இல்லையென்றாலும் நாளடைவில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்கும் பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கிறது. அந்த பொருட்களை வைத்து நம் வீட்டை எப்படி நறுமணத்துடன் வைத்து கொள்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Fragrance Your Home Naturally in Tamil:
காட்டன் பஞ்சு:
முதலில் ஒரு மூடி இருக்கும் பாக்ஸை எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கைப்பிடி அளவு காட்டன் பஞ்சை எடுத்து கொள்ளவும்.
பின் அந்த பாக்சில் காட்டன் பஞ்சை பாதி அளவிற்கு வைத்து அமுக்கி கொள்ள வேண்டும்.
பாத்திரம் கழுவுவதற்கு இனி கடையில் சோப்பு வாங்க வேண்டிய அவசியமில்லை..! எலுமிச்சை பழத்தின் தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..! |
கல் உப்பு எடுத்து கொள்ளவும்:
பின் ஒரு கிண்ணத்தில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் வினிகர் 3 ஸ்பூன் அளவிற்கு ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள காட்டன் பஞ்சு மேல் இந்த கல் உப்பை வைத்து கொள்ள வேண்டும்.
பின் அதில் உங்களுக்கு பிடித்த எஸ்சென்ஸ் அதாவது மல்லிகை எஸ்சென்ஸ் போன்ற ஏதாவது ஒரு வாசனை எஸ்சென்ஸ் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.
பாத்ரூம் டைல்ஸ் பளபளப்பாக இந்த நாளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துங்க |
அடுத்து பட்டை மற்றும் கிராம்பு எடுத்து கொள்ள வேண்டும். அதை உப்பில் சொருகி வைக்க வேண்டும். அதாவது மேல் படத்தில் உள்ளது போல வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த பாக்ஸை 30 நிமிடம் வரை மூடி வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து அந்த பாக்ஸை திறந்து உங்கள் வீட்டில் இருக்கும் எந்த அறையில் வேண்டுமானாலும் வைக்கலாம். இதனால் 5 நாட்கள் வரை உங்கள் வீடு முழுவதும் வாசனையாக இருக்கும். இதுபோல உங்கள் வீட்டையும் நறுமணத்துடன் வைத்து கொள்ளுங்கள்..!
உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..! |
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |