How To Get Clear Glowing Skin in Tamil
வீட்டிலிருந்து வெளியில் சென்று வருவதற்கு முகத்தில் தூசு படிந்து முகம் அழுக்காக ஆகிவிடுகிறது. இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்பட்டு முகம் கருமையாக மாறிவிடுகிறது. நாம் வெயிலில் சென்று வந்தாலும் நம் முகம் பளப்பளப்பாக இருக்க வேண்டுமென்றால் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பொலிவாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Tips For Glowing Skin Naturally at Home in Tamil:
முதலில் வெளியில் சென்று வந்தால் முகத்தை கழுவிக் கொள்ளவும். ஏனென்றால் வெளியில் செல்லும் போது முகத்தில் நிறைய தூசிகள் அடையும். வீட்டிற்குள் வரும் போது முகத்தை சோப்பு போட்டு கழுவிக் கொள்ளவும்.
அதன் பின் நாம் தூங்க போகும் போது முகத்தை கழுவிக் கொள்ளவும். முக்கியமாக தலையணையில் தூசி இல்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அதில் இருக்கும் தூசிகள் முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்.
அதேபோல் சிலருக்கு சோப்பை மாற்றி மாற்றி போட்டால் பருக்கள் வரும். ஆகவே மற்றவர்களின் சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!
How To Prepare Home Remedies For Glowing Skin in Tamil:
முதலில் 1 கைப்பிடி அளவிற்கு வெள்ளை உளுந்தை அரைத்து கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு 1 பீட்ரூட்டை சீவி அதிலுள்ள சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின், அந்த பேஸ்ட்டில் அரிசி மாவு 1 ஸ்பூன் மற்றும் தயிர் 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு மூன்றையும் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். இப்படி செய்து வருவதன் மூலம் முகம் நன்றாக இருக்கும்.இதனை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்ய வேண்டும். இந்த Face Pack –கை முகம் மட்டுமில்லாமல் கை, கால் வரை அப்ளை செய்யலாம்.
இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |