காய்கறி வாங்குவது
ஆண்கள், பெண்கள் இருவருமே காய்கறி வாங்கும் போது சில காய்கறிகளை தான் பார்த்து வாங்குவார்கள். வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி போன்றவற்றை தான் பார்த்து வாங்குவோம். மற்ற எல்லா காய்கறிகளையும் கடைக்காரர் போடுவதை வாங்கிடுவோம் அல்லவா.! வீட்டிற்கு வந்து சமைக்கும் போது தான் முத்தின முருங்கைக்காய், முத்தின வெண்டைக்காய் என்று தெரியும். இனிமேல் நீங்கள் காய்கறி வாங்கும் போதே எது நல்ல காய்கறி, எந்த காய்கறி உணவின் ருசியை கொடுக்கும் என்று காய்கறி வாங்கும் போதே பார்த்து வாங்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காயம்:
வெங்காயம் வாங்கும் போது அமுக்கி பார்த்து வாங்க வேண்டும். வெங்காயத்தை அமுக்கும் போது அமுங்கினால் அது நல்ல வெங்காயம் அல்ல. கல் மாதிரி உள்ள வெங்காயத்தை வாங்கி கொள்ளுங்கள்.
தக்காளி:
தக்காளி வாங்கும் போதே பாதி பழமாகவும், காயாகவும் வாங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் ⇒ சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு மேல் பகுதியில் பச்சையாக இருந்தாலோ, தழும்புகள் இருந்தாலோ அல்லது ஓட்டைகள் இருந்தாலும் வாங்க கூடாது. உருளைக்கிழங்கு கொஞ்சம் கனமாகவும் மேல் பகுதியை கீறினால் தோல் உரிய வேண்டும். இப்படி தான் உருளைக்கிங்கை வாங்க வேண்டும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காயை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும். முறுக்கும் போது காய் உடையாமல் இருந்தால் அது நல்ல காய். மேலும் காயில் கருப்பு கலர் ஏதும் படித்திருந்தாலும் வாங்க கூடாது.
கத்திரிக்காய்:
கத்திரிக்காயின் காம்புகள் சிறியதாக இருந்தால் காய் கசக்கும். கத்திரிக்காயில் ஓட்டைகள் இருந்தாலும் வாங்க கூடாது. கத்திரிக்காயின் காம்புகள் பெரியதாகவும், பச்சையாகவும் பார்த்து வாங்க வேண்டும்.
முட்டைகோஸ் வாங்கும் முறை:
முட்டைகோஸ் சிறியதாகவும், கனமாகவும் இருந்தால் வாங்கி கொள்ளலாம். காயில் கருப்பு நிறத்தில் ஏதும் இருந்தாலும் வாங்க கூடாது.
வாழைக்காய்:
வாழைக்காயை காம்பு பகுதியை பார்த்து வாங்க வேண்டும். காம்பு பகுதி வெள்ளையாக இருந்தால் நல்ல வாழைக்காய்.
பீன்ஸ்:
பீன்ஸ் நல்லா பச்சை நிறமாக பார்த்து வாங்க வேண்டும்.
அவரைக்காய்:
அவரைக்காயில் உள்ள விதைகள் பெரியதாக இருந்தால் முத்தின காய் அதை வாங்க கூடாது. விதைகள் சிறியதாகவும், இல்லாமல் இருந்தாலும் வாங்கலாம்.
முள்ளங்கி:
முள்ளங்கி பெரியதாகவும் இருக்க கூடாது, சிறியதாகவும் இருக்க கூடாது நடுத்தரமாக இருக்க வேண்டும். மேலும் முள்ளங்கியில் மேலே உள்ள இலைகள் பச்சையாக இருக்க வேண்டும்.
சவ்சவ்:
சவ்சவ் காயில் விரிசல் அதிகமாக இருந்தால் முத்தின காய் வாங்க கூடாது. குறைந்த விரிசல் இருக்கும் காயாக வாங்கவும்.
பீர்க்கக்காய்:
பீர்க்கங்காயை பச்சை நிறமாக இருக்க கூடாது. இளம் பச்சை நிறமாக உள்ளதாக வாங்க வேண்டும். மேலும் அடிப்பகுதி பெரியதாக இருக்க கூடாது.
காலிபிளவர்:
காலிபிளவரில் பூவுக்கு இடையில் இடைவெளி அதிகமாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ காய்கறிகள் பெயர்கள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |