வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கா..! அப்படினா இதை செய்யுங்க..!

Advertisement

வீட்டில் துர்நாற்றம் நீங்க

நம்முடைய வீடானது எப்போதும் தூய்மையாகவும், நறுமணத்துடனும் இருக்க வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் நினைப்போம். இதற்காக நாம் நிறையவற்றை செய்து வீட்டினை அழகாக வைத்துக் கொள்வோம். இவ்வாறு நாம் பார்த்து பார்த்து வைத்து இருந்தாலும் கூட சில நேரத்தில் துர்நாற்றம் என்பது வீசிக் கொண்டே தான் இருக்கும். இப்படி துர்நாற்றம் வீசுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். ஆனால் இவ்வாறு நாம் பயன்படுத்தினாலும் கூட எப்போதும் துர்நாற்றம் இல்லாமல் இருப்பது இல்லை. அதனால் இன்று வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டை சுத்தமாக வைக்கவும்:

நமது வீட்டினை எப்போதும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் துர்நாற்றம் வீசக் கூடிய அளவிற்க்கு ஏதேனும் பொருட்கள் இருந்தாலும் அதனை வெளியேற்றி விட வேண்டும்.

அதேபோல் வீட்டில் பொருட்கள் கண்ட இடத்தில் வைக்காமல் அது அது வைக்க வேண்டியதில் சுத்தமாக வைக்கவும்.

குறிப்பாக அழுகிய காய்கள், பழங்கள் மற்றும் உங்களுக்கே தெரியாமல் வீட்டில் இறந்த நிலையில் இருக்கும் பூச்சிகள் என இவ்வற்றை எல்லாம் இல்லாமல் பார்த்தக் கொள்ளவும்.

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளே மேற்கொண்டால் போதும் வீடு சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்க்கும்.

டிப்ஸ்- 1 

பேக்கிங் சோடா

உங்களுடைய வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டும் துர்நாற்றம் வீசுகிறது என்றால் உடனே நீங்கள் ஒரு பாத்திரம் அல்லது பூ ஜாடியில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனை துர்நாற்றம் வரும் பகுதியில் வைத்தால் உடனே அது நீங்கிவிடும்.

வீட்டில் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்ட இதை செய்தால் போதும்..

டிப்ஸ்- 2

  • எலுமிச்சை பழம்- 1
  • ரோஸ்மேரி இலை- சிறிதளவு 
  • தண்ணீர்-

எலுமிச்சை பழம்

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மேலே கூறப்பட்டுள்ள அனைத்தினையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பின்பு இவை கொத்தித்த பிறகு அதனுடன் சிறிதளவு பச்சை தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது இந்த தண்ணீரை துர்நாற்றம் வரும் பகுதிகளில் அப்படியே வைத்து விடலாம் அல்லது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி துர்நாற்றம் வருடம் இடத்தில் ஸ்பிரேவும் செய்து கொள்ளலாம்.

டிப்ஸ்- 3

அதேபோல் வீட்டின் குப்பை தொட்டிகளில் துர்நாற்றம் வீசினால் அதை உடனே நிறுத்தி விடலாம். அதாவது குப்பை தொட்டியிலிருக்கும் குப்பையினை முதலில் நீக்கி விடுங்கள்.

வீட்டில் துர்நாற்றம் நீங்க

அடுத்து அதன் உள்ளே ஒரு நியூஸ் பேப்பரை வைத்து மேலே பேக்கிங் சோடாவை சிறிதளவு கொட்டி விடுங்கள். இப்படி செய்தால் போதும் குப்பையில் தொட்டியில் வீசும் துர்நாற்றம் இருக்காது.

வீட்டில் ஈக்களின் தொல்லை நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்கள் 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement