உங்க வீட்ல மூட்டைப்பூச்சி பிரச்சனையா அப்போ இத Try பண்ணுக….

how to get rid of bed bugs naturally in tamil

மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க:

அனைவருடைய வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, ஈ, மூட்டை பூச்சி மற்றும் கொசுக்கள் என இதுபோன்ற உயிரினங்களின் பிரச்சனை என்பது அதிகமாக தான் இருக்கிறது. இந்த பிரச்சனை என்பது தற்போது தோன்றியது அல்ல. அனைவருடைய வீடுகளிலும் காலம் காலமாக இருக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் இத்தகைய பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் பலரும் யோசித்து இருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் நிறைய செயல் முறையினையும் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவற்றிற்கு எல்லாம் ஒரு சரியான தீர்வு என்பது கிடைத்து இருக்காது. அதனால் இன்று வீட்டில் தொல்லை செய்யும் மூட்டை பூச்சிகளை எப்படி வராமல் தடுப்பது என்பதற்கான வழிமுறைகளை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

மூட்டை பூச்சி:

மூட்டை பூச்சி பார்க்க சிறியதாகவும் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும் இந்த பூச்சியால் பறக்க முடியாது. இதன் உணவு மனித மற்றும் விலங்குகளின் இரத்தம் தான். இவை உங்கள் வீட்டு மூலைகள், வெடிப்புகள் மற்றும் மெத்தையில் காணப்படும்.

இவை நமது இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழக்கூடியது. இந்த மூட்ட பூச்சிகள் கடித்தல், சருமம் சிவந்து காணப்படும். நமது உறக்கத்தை பாதிக்க செய்யும் இந்த மூட்ட பூச்சிகள்.

மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க:

உங்கள் வீடுகளில் மூட்ட பூச்சிகள் தொல்லை இருந்தால் அவற்றை அளிப்பதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம் வாருங்கள்.

மூட்ட பூச்சிகள் ஈரப்பதத்தை விருபிக்கின்றனர். அதனால் உங்களின் வீட்டின் வெப்பநிலையை சற்று அதிகமாக வைத்திருப்பது நல்லது.

சமையல் சோடா:

how to get rid of bed bugs naturally

சமையல் சோடா உங்கள் வீட்டில் உள்ள மூட்டை பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

சமையல் சோடா ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது அதனால், உங்கள் வீட்டின் மூலைகள் ஜன்னல் ஓரங்களில் இதனை தெளிக்கலாம்.

சமையல் சோடா தெளிப்பதால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மூட்டை பூச்சிகள் இறந்துவிடும்.

தேயிலை மர எண்ணெய்:

மூட்டை பூச்சி வராமல் தடுக்க

தேயிலை மர எண்ணெய் பூஞ்சை, காளான், கிருமி நாசினிகள், ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை பெற்றது. எனவே இது ஒட்டுண்ணி பூச்சிகளை அகற்றக்கூடிய ஆண்டிபராசிடிக் பண்புயும் பெற்றுள்ளது.

இதனை, தண்ணீரில் கலந்து வீட்டின் மூலைகள் அல்லது வீட்டை சுத்தம் செய்யும் போது இவற்றை பயன்படுத்துவதால் மூட்டை பூச்சி கொள்ளப்படும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil